திருச்சி G கார்னர் மைதானத்தில் ஓடும் கார், பீதியில் மக்கள்
காலை 6 மணியளவில் திருச்சி சுப்ரமணியபுரம் G கார்னர் ஹெலிபேடில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தேன்.
G கார்னர் ஹலிபேட் மைதானத்தில் காலை 5.30 மணி முதல் 08.00 மணி வரை ஏராளமான ஆண்கள், பெண்கள் என 50 க்கும் மேற்பட்டோர் நடை பயிற்ச்சியில் இருப்பார்கள் குறிப்பாக இங்கு ஏராளமான வயதான பெண்கள் நடை பயிற்ச்சியில் இருப்பார்கள்.
இங்கு கடந்த சில மாதங்களாகவே டிரைவிங் ஸ்கூல் வாகனங்கள் தங்களிடம் டிரைவிங் கற்றுக் கொள்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர் அவர்கள் அனைவருமே பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கற்று கொடுப்பது வழக்கம் ( பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போல பயிற்ச்சியில் ஈடுபடுவது தவறு என்றாலும் இடையூறு இல்லாமல் சிலர் கற்று தருகின்றனர்)
இன்று இந்த வாகனம் மக்கள் நடக்கும் வழியில் இடையூறாக அவர்கள் நடந்து வரும் பாதையில் இவர்கள் எதிர் புறமாக ஹாரன் அடித்து கொண்டே கற்று கொடுத்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட பெண்கள் என்ன செய்வது என தெரியாலம் புலம்பி கொண்டே ஒதுங்கி ஒதுங்கி சென்றனர்.
இதனை கண்ட நடை பயிற்ச்சியில் இருந்த வாலிபர் ஒருவர் அவர் காரை வழி மறித்து ஏன் சார் இப்படி வாங்கிங் செல்பவர்களுக்கு இடையூறாக காரை ஓட்டுகின்றீர்களே நீங்கள் கற்று கொள்ள ஏகபட்ட இடங்கள் இருக்கும் போது இப்படி வாக்கிங் செல்பவர்களுக்கு இடையூறாக காரை ஓட்டுகின்றீர்களே என கேட்டதற்கு நீங்கள் ஏன் என் கார் ஓடும் வழியில் வாக்கிங் செல்கின்றீர்கள் ஓரமாக போக வேண்டியதுதானே என்றார்.
அதை கேட்ட அந்த வாலிபர் ஏன் சார் இந்த இடத்தை விடுத்து எதிர் புறம் காலியாகதானே இருக்கு அங்கே பயிற்சி கொடுக்கலாமே என்றார் அதற்கு அவர் நீங்கள் அங்கு வாக்கிங் செல்லலாமே என்று கூற இருவருக்கும் வாக்கு வாதம் நீண்டது.
அந்த டிரைவிங் ஸ்கூல்காரர் என்னால் வேறு இடத்தில் கற்று கொடுக்க முடியாது நீ வேண்டுமானால் வாக்கிங் வேறு எங்காவது செல் நான் இங்குதான் கற்று கொடுப்பேன் என சொல்லிவிட்டு அவர் அங்கேயே கற்று கொடுத்து கொண்டு இருந்தார்.
நடைபயிற்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களும் செய்வதரியாது முழித்து கொண்டு இருந்தனர்.
அவர் யாரை பற்றியும் கவலை படாமல் அங்கேயே கற்று கொடுத்து கொண்டிருந்தார்.
பெண்கள் இப்படி பயிற்சி எடுப்பவர்களுக்கு இங்கு எங்களை பயமுறுத்தும் வகையில் ஹாரன் அடித்து கொண்டு போகின்றார்களே ஓட்ட தெரியாமல் யாரையாவது இடித்து ஏதாவது நடந்தால் யார் பதில் சொல்வது இதை யார் தட்டி கேட்பது என புலம்பி கொண்டே சென்றது வேதனை.
இத்தனைக்கும் இந்த பயிற்சி வாகனம் ஓன் போட்டு (வெள்ளை நம்பர் பிளேட்) வாகனமாக இருக்கின்றது எனக்கு தெரிந்து பயிற்சி அளிக்கும் வாகனம் கமர்சியல் வாகனமாக (மஞ்சள் நெம்பர் பிளேட்) இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
மேலும் இந்த கிரவுண்ட் இரயில் வே வசம் உள்ளது என நினைக்கிறேன் இங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறும் முன்பே இரயில் வே காவல்துறையும் இரயில் வே நிர்வாகமும் வாக்கிங் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்களா.
மேலும் சம்மந்த பட்ட R.T.O அதிகாரிகள் ஓன் போர்டு வண்டியை கமர்சியலுக்கு பயன்படுத்தலாமா என ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.