தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜெயம் ரவி [இப்ப ரவிமோகன்]யின் ‘கோமாளி’ மூலம் கோலிவுட்டில் டைரக்டராக எண்ட்ரியானார் பிரதீப் ரங்கநாதன். அதற்கடுத்து ‘லவ் டுடே’வை டைரக்ட் பண்ணியதுடன் ஹீரோவாகவும் புரமோஷன் ஆனார். அப்புறம் ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களில் ஹீரோவாக மட்டும் ஜொலித்தார், ஜெயித்தார். இப்போது ‘பிஆர் ஷோ’ என்ற பெயரில் சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’ என்ற பெயரில் ஆறு பேரையும் டைரக்டர்களாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து, சுவாசிகா, சிவாஜி சொண்டினேனி, அனாமிகா மகி, லிஸி ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு : தினேஷ்குமார் புருஷோத்தமன், இசை: சாய் அபயங்கர், எடிட்டிங்: பிரதீப் ராகவ், பி.ஆர்.ஓ. : ‘எஸ்-2’ சதீஷ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாராகும் பிரதீப் ரங்கநாதனின் முதல் தயாரிப்பின் ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டதாம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.