தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ச் சங்க வளாகம் ! கொதிக்கும்  தமிழ் ஆர்வலர்கள் !

0

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ச் சங்க வளாகம் ! கொதிக்கும்  தமிழ் ஆர்வலர்கள் !

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்தோற்றுவிக்கப் பட்ட நாள் முதல் இன்று வரை தமிழை வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.! 25.08.1959 இல் திருச்சி தமிழ் சங்கம் கட்ட கர்மவீரர் காமராசர் ஆட்சிக்காலத்தில் அரசால் வழங்கப்பட்டது. மேற்படி சொத்தை சங்கத்தினர் விற்க இயலாது. ஏனென்றால் அரசால் வழங்கப்பட்ட இடமாகும். எனவே ஆக்கிரமிப்புபிடியில் உள்ள தமிழ்வளர்த்த தமிழ்ச்சங்க சொத்தை மீட்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு
தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு

 

- Advertisement -

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பேசுகையில்,

மதுரையில் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் நான்காம் தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூரில் வழக்குரைஞர் உமாமகேஸ்வரன் பிள்ளை, கரந்தை தமிழ் சங்கத்தை நிறுவினார். இவற்றின் தாக்கமாக திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தை துரைராச பிள்ளை என்பவர் நிறுவினார். இவர் தஞ்சாவூரை அடுத்த கரந்தட்டாங்குடியில் 02.03.1910 ஆம் நாளில் பிறந்தவர். சட்ட மேலவை உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தான் திருச்சி தமிழ் சங்கத்தை நிறுவியவர்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திருச்சியில் குறள் அன்பர்கள் குழு இயங்கி வந்தது. திருச்சி (Trichy) ப்ரோமெனெடு தெருவில் இருந்த கு.விஸ்வநாதன் என்பவர் இல்லத்திலும், பின்னர் தி.செ.மு.அ பாலசுப்பிரமணியம் செட்டியார் இல்லத்திலும் இக்குழு கூடி திருக்குறள் சிந்தனைகளை பரப்பி வந்தது. இந்த குழுவை துரைராசபிள்ளை முன்னின்று நடத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக, திருவள்ளுவர் ஆண்டு 1987 மார்கழி மாதம் 26 ஆம் நாளில், (04/01/1956) கு.விஸ்வநாதன் இல்லத்தில் கூடி, திருச்சியில் தமிழ் கல்லூரியையும், தமிழ் சங்கத்தையும் அமைக்க வேண்டும் என குறள் அன்பர்கள் குழு முடிவு செய்தது.

இதன்படி 11.03.1956 ஆம் நாளில் ஸ்ரீரங்கத்தில் உள்ள வாசுதேவபுரம் ராஜபவனத்தில் மாணிக்கவாசகம் பிள்ளை தலைமையில் கூடிய கூட்டத்தில், துரைராசபிள்ளை முன்மொழிய திருச்சி தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் முதல் தலைவராக பாலசுப்ரமணியம் செட்டியார் பதவியேற்றார். துணைத் தலைவராக அய்யம்பெருமாள் என்பவரும், செயலராக துரைராசபிள்ளை, பொருளாளராக சுப்பையா செட்டியார் ஆகியோர் பதவியேற்றனர். அரசு சங்க சட்ட விதிகளின்படி, 03.12.1956 இல் ஆவணக்களத்தில் சங்கம் பதிவு செய்யப்பட்டது.

 

தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு
தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு

 

திருச்சி தமிழ் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேடும் பணியில் துரைராசபிள்ளை ஈடுபட்டு, அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஜனாப் குலாம் முகமது பாஷாவிடம் இடம் கோரி பரிந்துரை செய்தார். திருச்சி மேலரண் சாலையில் கெயிட்டி திரையரங்கத்துக்கு முன்பு இருந்த இடத்தை 25.08.1959 இல் திருச்சி தமிழ் சங்கம் கட்ட தமிழக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான கால்கோள் விழா 17.09.1959 இல் நடைபெற்றது. 07.05.1961 இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த இரு விழாக்களிலும் அப்போதைய தமிழக அரசின் முதல்வர் காமராஜர் பங்கேற்று சிறப்பித்தார். இதன் தொடர்ச்சியாக அமைக்கபட்ட தமிழ் சங்க நூல் நிலையத்தை கல்வி அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் 28.09.1961 இல் திறந்து வைத்தார். 1970 இல் சங்கத்தின் தென்புறத்தில் புதிய கட்டடம் கட்டப்பெற்றது. 1990 இல் சங்க புதிய கட்டிடத்தில் முதல் தளம் அமைக்கப்பட்டது. 2000 இல் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. 2014 இல் இரண்டாம் தளம் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் அரங்கம் கட்டப்பட்டது.

திருச்சி தமிழ் சங்கமானது (Trichy Tamil Sangam) பல்வேறு ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. தமிழறிஞர் கி.ஆ.பெ விஸ்வநாதனுக்கு முத்தமிழ்க் காவலர் என்னும் விருது வழங்கியது. பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, எம்.பக்தவத்சலம், ராஜா சார் முத்தையா செட்டியார், நீதியரசர் சிங்காரவேலன், திருமுருக கிருபானந்த வாரியார், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை அழைத்து கவுரவித்து பெருமை சேர்த்துள்ளது.

 

தமிழ்ச் சங்கம் இடம் ஆக்கிரமிப்பு
தமிழ்ச் சங்கம் இடம் ஆக்கிரமிப்பு

 

சங்கம் தோற்றுவித்த நாளில் இருந்து 62 ஆண்டுகளாக இடைவிடாது தமிழ்ப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளது. 1973 முதல் ஆண்டுதோறும் கம்பருக்கு புகழ் விழா நடத்தப்பட்டு வருகிறது. 1974 இல் தமிழிசை விழாவை நடத்தியது. 1975 இல் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இவரது 200 வது ஆண்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூல்களை மூன்றாவது முறையாக (2015 ல்) அச்சிட்டு வழங்கியது. ஆய்வரங்கங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், பத்து மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்குகிறது. இலக்கண ஆசிரியர்கள், காப்பிய புலவர்கள், புராண மேதைகள், பிரபந்த விற்பன்னர்கள், சைவ சமய நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் என வேறுபாடின்றி அனைத்து புலவர்களுக்கும் விழா எடுத்து சிறப்பித்து வருகிறது. வாரம்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் சங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் அனைத்து மாணவர்களுக்கும் நீதி நூல்களை வழங்கி போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகிறது.

4 bismi svs

திருச்சி தமிழ் சங்கத்தை நிறுவிய துரைராசபிள்ளை 14/10/1975 இல் காலமானார். இவரது நினைவாக சங்க வளாகத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 14/10/1979 இல் இந்த சிலையை மருத்துவ மேதை ஜி.விஸ்வநாதபிள்ளை திறந்து வைத்தார். இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்டு திருச்சியில் தமிழுக்கான கலைக்கோவிலாக நிமிர்ந்து நிற்கிறது தமிழ் சங்கம்.

தமிழ் சங்கத்தில்

தெ.மு.அ.பாலசுப்பிரமணியன் செட்டியார் ( 11/03/1956 – 02/10/1956 )
எட்வர்டு பால் மதுரம் ( 1956 – 1971 )
ஆர்.கிருஷ்ணசாமி செட்டியார் ( 1971 – 1980 )
ந.சுப்பிரமணியம் செட்டியார் ( 1980 – 1992 )
அரு.அண்ணாமலை செட்டியார் ( 1992 – 2007 )
சிவ.ப.மூக்கப்பிள்ளை
தலைவராக இருந்துள்ளனர்.

தற்போது முனைவர் அரங்கராசன் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

துரைராச பிள்ளை (1956 – 1975 )
பெரியசாமி பிள்ளை (1975 – 1988 )
ஆவிச்சி செட்டியார் ( 1998 – 2002 )
சிவக்கொழுந்து (2002 ஆம் ஆண்டு முதல் )
உள்ளிட்டோர்
தமிழ்ச் சங்க அமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
பொறுப்பு அமைச்சராக உதயகுமார் தற்போது
செயல்பட்டு வருகிறார்.
சுப்பையா செட்டியார் (1956 – 1959 )
ஆவிச்சி செட்டியார் (1959 – 1998 )
தனேந்திரன் ( 1998 ஆம் ஆண்டு முதல் )
தமிழ்ச் சங்க பொருளாளர்களாக
இருந்துள்ளனர்.

இத்தகைய பெருமைகளை பெற்ற திருச்சி தமிழ்ச் சங்கம் அது தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழை வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.!

1976 கிருபானந்த வாரியார்
1977 அ. நடேச முதலியார்.
1978 கி.வா.சகந்நாதன்
1979 தண்டபாணி தேசிகர்.
1980 முருகேச முதலியார்
1981 ஈரோடு. அ. ஞானசம்பந்தம்.
1982 உடுமலைப்பேட்டை கா. நயினார் முகம்மது
1983 ஆபிரகாம் அருளப்பர்.
1984 ஆர். இராதாகிருட்டினன்
1985 ப. ஆறுமுகம்.
1986 வெள்ளைவாரணன்.
1987 . வே. ராமநாதன் செட்டியார்.
1988 கி. வேங்கட சுப்பிரமணியன்
1989 வ. சுப. மாணிக்கம்
1990 கி. ஆ. பெ. விசுவநாதம்
1991 கு. சுந்தரமூர்த்தி.
1992 அவ்வை து. நடராசன்
1993 இரம்போலா மாசுகரேனசு
1994 இரா. இளங்குமரன்
1995 இளங்கம்பன்
1996 .க. பத்மநாப ரெட்டியார்
1997 தமிழண்ணல்
1998 சி. பாலசுப்பிரமணியன்
1999 சுப.அண்ணாமலை
2000 அ.மா.பரிமணம்.
2001 ச.மெய்யப்பன்
2002 ப. அரங்கசாமி
2003 . சி. அரசப்பனார்
2004 இரா. இளவரசு.
2005 ஆ.வே. இராமசாமி
2006 ச.வே.சுப்பிரமணியன்
2007 மா. எழில் முதல்வன்
2008 ச. சீனிவாசன்
2009 இ.சுந்தரமூர்த்தி
2010 வை. இரத்தினசபாபதி
2011 அ.அ.மணவாளன்
2012 கு.சிவமணி
2013 கல்வெட்டு ஆய்வாளர் சி. கோவிந்தராசனார்

 

தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு
தமிழ்ச் சங்கம் ஆக்கிரமிப்பு

 

உள்ளிட்டோர்க்கு தமிழ்ச்சங்கத்தின் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு மிக்க தமிழ்ச்சங்கத்தின் முன் பகுதியில் இடத்தில் மதில் சுவர் மற்றும் கழிவறை இடிக்கப்பட்டு சுமார் 1500 சதுரஅடி நிலத்தை கெயிட்டி தியேட்டர் நிர்வாகம்  ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதில் 30வருட அத்திமரம், புளிய மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்டெடுக்கப் பட வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் சங்கம் - கெயிட்டி தியேட்டர்
தமிழ் சங்கம் – கெயிட்டி தியேட்டர்

இது குறித்து தமிழ்சங்கத்தின் நலன் விரும்பிகள் சிலரிடம் நாம் பேசிய போது.. திருச்சி மாவட்டத்தின் தாய் சங்கம் தான் தமிழ்சங்கம்… இந்த இடத்திற்கு அருகே  கெயிட்டி தியேட்டர்   ஆரம்பத்தில்  பெமினா குரூப் விலைக்கு வாங்கி முன் பாதை வழி குறுகலாக இருக்கிறது என்று அதை விரிவு படுத்துவதற்காக  இப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள தமிழ்சங்கத்தின் இடத்தை பெரும் தொகை ( கோடிக்கணக்கில் ) 2001 ஆண்டு…  பேசி விலைக்கு கேட்டார்கள். 

இந்த பஞ்சாயத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுபசோமு மூலம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். பிறகு அதே இடத்தை PLA கனகு என்பவர் வாங்கி கிடப்பில் இருந்தது . தற்போது விக்ரம் என்பவர் இப்போது  தமிழ்சங்கத்தின் முன்பகுதியில் ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு பதிலாக கெயிட்டி தியேட்டரின் இடத்தை கொஞ்சம் கொடுத்து பரிவர்த்தனை செதுள்ளார்கள்.

தமிழக அரசு இலவசமாக கொடுத்த இடத்தை அந்த கமிட்டி ஒரு தனியாருக்கு தானமாக கொடுக்கவே முடியாது என்று இது மோசமான முன் உதாரணம். இதை தமிழ்சங்கத்தின் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் இதற்கு முழு உடந்தையாகி இருக்கிறார்கள் என்று நம்மிடம் புகார் வாசித்தார்கள். 

தமிழ் சங்கம் - கெயிட்டி தியேட்டர்
தமிழ் சங்கம் – கெயிட்டி தியேட்டர்

இதுகுறித்து நாம் தமிழ் சங்கத்தின்  அமைச்சர் என்று அழைக்கப்படும் செயலாளர் சிவக்கொழுந்து என்பவரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். அவர்  நமது அழைப்பை ஏற்க்கவில்லை. இதை தொடர்ந்து மாணிக்கம் என்கிற செயற்குழு உறுப்பினரிடம் தொடர்பு கொண்டோம்.  அவர் இது தவறான தகவல், எங்கள் அமைச்சர் மிகவும் நேர்மையானவர், கண்டிப்பானவரும்  அப்ப எதுவும் நடக்கவில்லை. இப்போதைக்கு பராமரிப்பு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 10 நாள் வேலை முடிந்த பிறகு பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என்றார்.

எது எப்படியோ  தமிழக அரசு இலவசமாக திருச்சி மூத்த முன்னோடி சங்கமான தமிழ்சங்கத்திற்கு கொடுத்த  இடங்களை குறிப்பிட்ட சில தனியார் தொழில் அதிபர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை, என்று வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். இதை கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.