லாப நோக்கற்ற, நேர்மைத் திறன்மிக்க ‘வானம் கலைத் திருவிழா!- டைரக்டர் பா.இரஞ்சித்தின் முக்கிய முன்னெடுப்பு!

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா"

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லாப நோக்கற்ற, நேர்மைத் திறன்மிக்க ‘வானம் கலைத் திருவிழா!- டைரக்டர் பா.இரஞ்சித்தின் முக்கிய முன்னெடுப்பு!

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாத கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் துவக்கி வைத்த விழா பறை இசையுடன் வெகு சிறப்புடன் ஆரம்பமானது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.


இதனைத் தொடர்ந்து திரைக்கதையாசிரியர் ஜா.தீபா அவர்கள் தொகுத்த “சமூக சிந்தனை” எனும் தலைப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் P. S. வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் “திரைத்துறையில் இயக்குநர் பா. இரஞ்சித்தின்வருகைக்குப் பிறகு மிக எளிதாக சமூக சிந்தனை கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது” என்று பேசினார்.இதனைத் தொடர்ந்து இயக்குனர் அதியன் ஆதிரை, இயக்குனர் பா. இரஞ்சித், கலை இயக்குனர் இராமலிங்கம், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோருடன்கலந்துரையாடல் நடந்தது.
கடைசி நாளான 10.04.2024 நிகழ்வில் ‘மாமன்னன்’ படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குனர், கலை இயக்குனர், படத்தொகுப்பாளர், சவுண்ட் டிசைனர் அனைவரும் பார்வையாளர்களோடு கலந்துரையாடினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் பிறகு ‘டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நவ் & தென்’ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ஜோதி நிஷா கலந்துரையாடினார். அதன் பிறகு இயக்குனர் ரிந்து தாமஸ் மற்றும் சுஷித் கோஷ் ஆகியோர்கள் இயக்கிய ‘ரைட்டிங் வித் ஃபயர்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ‘தலித் சினிமா’ எனும் தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் இளம்மருது தொகுத்து வழங்க இயக்குனர்கள் பா. இரஞ்சித், ஜெயகுமார், டாக்டர் பிஜு தாமோதரன் ஆகியோர்கள் கலந்துரையாடினர்.

 

இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில் “சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்ப்பதற்க்காக எடுக்கப்படும் படங்கள் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” என்று விமர்சித்த பா.இரஞ்சித்,
“இயக்குனர் ஜெயக்குமாரின் ‘புத்தமும் அவரது தம்மமும்’ நூல் தான் தனது படங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறது என்றார் பா.இரஞ்சித்.


இதனைத் தொடர்ந்து பல படங்கள் திரையிடப்பட்டு, PK ரோசி திரைப்பட திருவிழாவின் கடைசி நாள் இனிதே நிறைவடைந்தது.திரைப்பட விழாவை தொடர்ந்து வருகிற 13/04/2024 ல் தம்மா நாடக விழா, 15/04/2024 ல் நித்தம் புகைப்பட விழா, 24/04/2024 – 30/04/2024 கலையும் அழகியழும் ஓவிய கண்காட்சி மற்றும் 27/04/2024 & 28/04/2024 தலித் வேர்சொல் இலக்கிய கூடுகை போன்ற பல நிகழ்வுகள் இம்மாதம் முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நடந்த அனைத்து நாட்களிலும் அனைவருக்கும் உணவு, கனிவான உபசரிப்பு, நேர்த்தியான விழா தொகுப்பு, வெறுப்பில்லாத பேச்சு, லாப நோக்கற்ற நேர்மைத் திறன் என டைரக்டர் பா.இரஞ்சித்தின் இந்த முன்னெடுப்பு தமிழ்த்திரையுலகில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.