நடிகர் ராகவா லாரன்ஸ் : அருவெறுப்பின் உச்சம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

”புதுசா ஒருவர் வீதியில் வந்தால் அவரை பார்த்து தெருநாய் குரைக்கத்தான் செய்யும். தெருநாய்க்கு பிடிச்ச பிஸ்கட் போட வேண்டும். சில தெருநாய்கள் நான்வெஜ்தான் சாப்பிடும். ஒரு நாய்க்கு ஒரு வீட்டுக்கு இவ்வளவு ஆகிறது என்றால், ஒரு நாட்டை கொடுக்கும் பொழுது அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்.” என்று த.வெ.க.வின் ஆட்சி குறித்து பொதுமக்களை தெருநாய்களோடு ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தற்போது, இதே பாணியில் மாற்றுத்தினாளி நபர் ஒருவரை இழிவாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்பதை தெரிவிப்பதற்காக பதிவிட்ட வீடியோவில், ‘இதெல்லாம் நான் என் சொந்த வீட்ல வளர்க்கிறேங்க… நான் புதுசா வாங்கின வீட்ல வளர்க்கிறேன்…’ என மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை தன் முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார், நடிகர் ராகவா லாரன்ஸ்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நடிகர் விஜய் நடித்த சுறா திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி போல, நாய்களுக்கு கூட ஸ்டைலாக மனிதர்களின் பெயரை வைத்து செல்லமாக வளர்த்துவரும் நிலையில், மாற்றுத்திறனாளி நபரை காட்டி ” இதெல்லாம்” என குறிப்பிட்டு பேசியிருப்பது வெறுமனே பணத்திமிர் மட்டுமல்ல; அருவெறுப்பின் உச்சம் !

– அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.