”ரஜினியின் கூலி” 55 அடி நீள பிளக்ஸ் ! ரசிகர்களின் வரவேற்பும், கொண்டாட்டமும் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தும் ரஜினி ரசிகர்கள் …..

மூன்று தலைமுறைகளை கடந்து இன்றளவும் ரசிகர்களைக் கொண்ட ரஜினி ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட தயாராகி வரும் ரசிகர்கள்   ரஜினி பட போஸ்டருக்கு பல அபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்து கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

இந்த வார அங்குசம் வார இதழில்…

திரையுலகில் கருப்பு வெள்ளை திரைப்படம் தொடங்கி இன்றைய ஏ- அய் தொழில்நுட்பம் வரை மூன்று தலைமுறை கடந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கின்றார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே

ரஜினியின் கூலிசினிமா, அரசியல், திருவிழா என எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் மதுரையை மையமாக வைத்துதான்அதனுடைய வெற்றி தீர்மானிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அந்த வகையில் சினிமாதுறையில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர்.

படத்திலிருந்து ஏற்கனவே ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ரஜினியின் கூலிமதுரை அரசரடியிலிருந்து பெரியார் நோக்கி செல்லும் பிரதான சாலைப் பகுதியில் 55 அடி நீளத்திற்கு அன்று அவர் நடித்த காளி படத்தின் வரக்கூடிய காட்சியை பிரதிபலிக்கும் வண்ணமாகவும் தற்போது வெளியாக உள்ள கூலி படத்தில் அவர் நடித்த காட்சியையும் மையமாக வைத்து பிளக்ஸ் போஸ்டராக ஒட்டி அதில் ரஜினியின் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த நிலையில்,

கடவுளே ரஜினியே , மனிதக் கடவுள் ரஜினிகாந்த் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இறையுலகில் முடி சூடா மன்னன் ரஜினிகாந்த் என்று கோஷம் எழுப்பியவர் வண்ணக் காகிதங்களை  பூ மலையாக பொழிய விட்ட நிலையில் கேக்கு வெட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஜினியின் கூலிமேலும் கூலி திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களை போன்று தத்ரூபமாக வேடமிட்டு வரக்கூடிய வேளையில் இந்த ஆண்டு படம் வெற்றி பெற மன்சோறு சாப்பிட உள்ளதாகவும்,

படத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்தை போன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தோடு முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்கிற்கு வர உள்ளதாக ரஜினி ரசிகர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

ரஜினியின் கூலிமொத்தத்தில் கருப்பு வெள்ளை திரைப்படம் கலர் திரைப்படம் டிஜிட்டல் திரைப்படம் என மூன்று பரிணாமங்களிலும் மூன்று தலைமுறைகளையும் கடந்து ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு நடிகராக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரக்கூடிய திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

 

—   ஷாகுல், படங்கள்  : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.