அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

2026-ல் மீண்டும் சமத்துவ ஆன்மீக ஆட்சி தொடர வேண்டும் – அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் ஆதரவு

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்து ஆன்மீக நம்பிக்கையை மூலதனம் ஆக்கி, அதிகாரத்தைப் பிடித்த பாஜக இந்நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்களின் வாழ்வு ஆதாரத்தை அழித்தது. ஆனால், மக்களுக்கு சமத்துவ உணர்வும் சுயமரியாதையும் உணர்வும் ஊட்டி, மக்கள் வாழ்வில் மட்டுமில்லாமல் – தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தமிழர்களின் தன்மான ஆட்சிப் பயணம் தொடங்கியது. அப்பயணத்தை அண்ணாவிற்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னெடுத்தார். கலைஞருக்கு பின்பு, தளபதி ஸ்டாலின் வழியில் அப்பயணம் தொடர்கிறது. இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திராவிடத் தமிழர் தன்மான ஆட்சியின் மிக முக்கியமான சமூகம் நீதித் திட்டம் ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்துவது. இதற்கான சட்டத்தை 1972ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்தார். அப்போது சில வஞ்சகக் கூட்டத்தார், நீதிமன்றப் படியேறி நீதி என்ற பெயரில் அநீதியாக சதி செய்து செய்து அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை  தடுத்தனர். 2006 – 09 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது, தாயுமானவராக அரவணைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் வழியில் தளபதியும் கருவறையின் சாதி பேதத்தையும், பாலின பேதத்தையும் ஒழித்து, சமத்துவ ஆன்மீகத்தைக் கட்டி எழுப்பப் போராடி வருகின்றார். அவர் பக்கம் நாங்கள் நிற்கின்றோம்.

ஆகஸ்ட் 14, 2021 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பார்ப்பனர்கள் அல்லாத அர்ச்சகர் மாணவர்களை நியமித்தார்  முதல்வர்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

ஈராயிரம் ஆண்டுகளாக கருவறை இருளை  அகற்றியவர் முதலமைச்சர் அவர்கள்.உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகளை தொடர்ச்சியாக பிஜேபி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக வழக்குகள் போட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு,தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் உறுதியாக நின்று அர்ச்சகர் மாணவர்களுக்காக ஆதரவாக நின்று போராடி வருகிறார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் மூலம் இந்தத் திட்டம் நிறைவேறக்கூடாது என்பதற்காக, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்திற்கும், கொலை மிரட்டல்கள் விடுத்தும், அச்சுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பியும் வருகின்றன. அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்து,அந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றினார்.

தமிழ்நாட்டில் 2007 2008 ஆம் ஆண்டு 207 மாணவர்கள் பயிற்சி முடித்துள்ளார்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022 -2023 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில்  தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை,  முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டில்  96 மாணவர்கள் 2025 -2026 ஆம் ஆண்டில் 100 அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர். பெண்களும் ஏராளமானவர்கள் படித்து முடித்துள்ளார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலைத்துறை  சிறப்பான செயல்பாட்டை செய்து வருகிறது. கருசுமக்கும் பெண்கள் கருவறைக்குள் என்ற முழக்கத்தை முன்வைத்து பணி செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை பல குடமுழுக்குகளும் அரிய வகையான ஆன்மீக சம்பந்தமான நூற்றுக்கணக்கான நூல்களையும் ஆய்வு செய்து அதை புத்தகமாகவும் வெளியிட்டு  துறை சார்பாக இலவச திருமணங்கள், பழமையான கோயில்களை கண்டறிந்து  திருப்பணி செய்வது, என தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வழிகாட்டுதல் செய்து வருகிறார்.

வா.ரங்கநாதன்,
வா.ரங்கநாதன்,

ஆரியத்திற்கு எதிராக, சனாதன மனுதர்மத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அதில் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில் ஆகம கோவில்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சென்னை பார்த்தசாரதி திருக்கோயில் போன்ற கோயில்களில் மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு  கருவறையில் சமத்துவமாக அர்ச்சகராகவும் ஓதுவராகவும் பணியாற்ற  தொடர் போராட்டத்தை திமுக முன்னெடுக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக உங்களிடம் கோரிக்கை முன்வைக்கிறோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பாசிசத்தை வீழ்த்த, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க,  பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் ஜனநாயகக் போர்க்களம் காண்பது, நம் ஒவ்வொருவரின் மாபெரும் ஜனநாயகக் கடமை. இப்போர்களத்தில் கண்ணனாக நின்று, மு.க. ஸ்டாலின் எல்லோரையும் வழிநடத்திச் செல்கிறார். இது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பது ஆகும்.

”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்” என்கிற நற்சிந்தையுடையோர் ஒவ்வொருவரின் ஆன்மிக உள்ளத்தோடு, நம்முடைய முதலமைச்சர் “ தொடர்ந்து ஆட்சியில் அமர வேண்டும் என்று அனைவரும் சார்பாக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர்,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.