புனித வளனார் கல்லூரியில் 2 நாள் இந்திய வெளியுறவுக்கொள்கை கருத்தரங்கம்
புனித வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி – முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை மற்றும் இந்திய உலக விவகார கவுன்சில், புதுடெல்லி ஆகியவை இணைந்து நடத்தும் “ இந்தியாவின் முக்கிய வெளியுறவுக்கொள்கை முன்னுரிமைகள்: அண்டைநாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும் உலகளாவிய மாற்றங்கள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் ஜூலை 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் உள்ள செயில் அரங்கில் நடைபெற்றது. ஐ.நாசபையில் இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியும் ஐஐடி சென்னை தனிச்சிறப்பு பேராசிரியருமான திரு. T.S. திருமூர்த்தி, (இந்தியவெளியுறவுபணி, ஓய்வு) அவர்கள் துவக்க உரையாற்றி “மாறிவரும் உலகில் வழி செலுத்துதலும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம், ஆபரேஷன் சிந்தூர், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் இந்தியா தனது சமநிலையான வெளியுறவுக்கொள்கைகள் மூலம் ஒரு முக்கிய வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது குறித்து உரையாற்றினார்.
ICWA, புதுடெல்லியின் ஆய்வு அலுவலர் முனைவர் தேஷுசிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ICWA-வின் பங்களிப்பு குறித்து விளக்கினார். புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருட்தந்தை பவுல்ராஜ் மைக்கேல் தலைமையுரை ஆற்றினார். செயலர் அருட்தந்தை அரோக்கியசாமி மற்றும் கல்லூரி முதல்வர் அருட்தந்தை K. அரோக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இத்தகைய கருத்தரங்கின் பேச்சாளர்களாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – புதுடெல்லி, அமலா மருத்துவ அறிவியல் நிறுவனம் – திருச்சூர் ராஷ்டிரியரக்ஷா பல்கலைக்கழகம் – குஜராத், சென்னை லயோலா கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இத்தகைய கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிறைவு விழாவில் துணைமுதல்வர் அருள்ஒளி கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இக்கருத்தரங்கின் அமைப்பாளராக முனைவர் V. பாஸ்டின் ஜெரோம் வழிநடத்தினார். முனைவர் S. அருள்தாஸ் நன்றியுரை ஆற்றினார். இரண்டு நாட்களும் சிறப்பாக நடைபெற்றது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.