துறையூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ! வாலிபர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவிகள் இரண்டு பேரையும் துறையூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.
மேலும், பாலியல் தொல்லை கொடுத்த சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேரிடமும் உப்பிலிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ பரிசோதனையில் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணம் ஆனால், வாலிபர்கள் இரண்டு பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சம்பந்தபட்ட கிராமத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— ஜோஷ்.