துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப்பள்ளி மாணவன் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி, லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் மண்டலங்களில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை (NCC) கேடட்டுகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நவலூர்குட்டப்பட்டில் அமைந்துள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த NCC கேடட்டுகள் பங்கேற்றனர். இதில் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர் கலந்து கொண்டு தனது சிறப்பான துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
மாணவரின் இந்தச் சிறப்பான சாதனைக்கு பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், NCC அதிகாரிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
விரிவான செய்தி அங்குசம் இதழில் விரைவில் …
— சதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.