அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

112 பதக்கங்கள் பெற்று திருச்சி ரைபிள் கிளப் சிறப்பிடம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி 112 பதக்கங்களை குவித்து சிறப்பிடம் பெற்றது. திருச்சி மாவட்ட அளவிலான 4-வது துப்பாக்கிச் சுடும் போட்டி, கே.கே நகரில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

பாலினம், வயது, குழு என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அகாடமிகளில் இருந்து 200-க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி 45 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலம், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பதக்கங்கள் 10 என மொத்தம் 112 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

விமான நிலையம் அருகே வயர்லஸ் சாலையில் உள்ள பார்ன் சூட்டர்ஸ் அகாடமி 33 தங்கம், 19 வெள்ளி, 19 வெண்கலம், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பதக்கங்கள் 10 என மொத்தம் 81 பதக்கங்களுடன் 2-ம் இடம் பிடித்தது.

போட்டிகளின் முடிவில் சாம்பியன்களின் சாம்பியன் என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் பாலின பாகுபாடின்றி பங்கேற் றனர். இதில் பார்ன் சூட்டர்ஸ் அகாடமியின் ஜாயல் தெபோ ராள்(13), மூத்த வீரர்களை பின்னுக்குத் தள்ளி 2 பிரிவு களிலும் வெற்றி பெற்று சாம் பியன் பட்டத்தை வென்றார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, திருச்சி ரைபிள் கிளப் பொறுப்பாளர் சந்திரமோகன் வரவேற்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.