ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

முக்கொம்பு காட்டன் சிலைக்கு மாலை போட்டு இனிப்புகள் வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்.

கொள்ளிடத்தில் முக்கொம்பில் மேலணையும், கும்பகோணம் அணைக்கரை பகுதியில் கீழணையும் கட்டி டெல்டா பகுதிகளை நெற்களஞ்சியம் ஆக்கிய ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்களின் 223 வது பிறந்தநாள் முக்கொம்பில் விவசாயிகள் சார்பாக சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது .

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொருளாளர் அயிலை சிவ சூரியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட தலைவர் , மாவட்ட செயலாளர் ஆர் பழனிச்சாமி, கரூர் மாவட்ட செயலாளர் செல்வம் ,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி நிர்வாகிகள் புங்கனூர் செல்வம் வயலூர் ராஜேந்திரன்,ம.தி.மு.க ஜெகதீசன் , சமூக ஆர்வலர் அய்யாரப்பன் குழுமணிபிரசன்னா, ஆரோக்கியம், V.P . சண்முகம் , மூவானுர் க சுப்பிரமணி தொட்டியம் சதீஷ்,சுரேஷ் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இறுதியில் கீழ் கன்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை “நீர் பாசன மேலாண்மை தினமாக” அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று  அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .

தமிழகத்தில் நீர் பாசனதுறைக்கென தனி அமைச்சகம் அமைத்து நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அழிந்து வரும் காவிரியை பாதுகாக்க “நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை” நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திருச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு உரிய நிதிஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

 

அயிலைசிவசூரியன்

மாநில பொருளாளர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.