இலங்கைக்கு பீடி இலைகள் ! ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்!
இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தல் ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை பகுதியில் தொடரும் கடத்தல்கள் சம்பவங்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதி மிக நீண்ட கடற்கரை பகுதி இப்பகுதியில் சமீப காலமாக இலங்கைக்கு பீடிஇலைகள், மஞ்சள், மருந்து பொருட்கள், தொடர்ந்து கடத்தி வருகின்றனர். அவ்வப்போது கடத்தல் காரர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும்,
காவல்துறையினர் வனத்துறையினர் சுங்கத்துறையினர் ஆகியோரின் கண்களில் மண்களை தூவி விட்டு பெரிய பெரிய கடத்தல்கள் அதிகார வர்க்கத்தின் ஆசியோடு நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் நாமக்கல் மாவட்ட பதிவென் கொண்ட மினி வேன் பிடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதாக கீழக்கரை உட்கோட்ட தடுப்பு பிரிவு எஸ்ஐ முத்து செல்வத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அவருடன் உளவு பிரிவை சேர்ந்த முதல் நிலை காவலர் பாலமுருகன் திருப்புல்லாணி முதல் நிலை காவலர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காவல்துறையினர் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மினி வேன் மற்றும் 30 கிலோ வீதம் என்பது மூட்டைகளில் இருந்த பீடி இலைகள் சுமார் 2400 கிலோ பீடி இலைகளை மீட்டு கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இது பற்றி நாம் விசாரித்த போது பலமுறை இப்பகுதியில் இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது நாம் சென்று பார்க்கும் போது அந்த இடத்தை காலி செய்து ஓடி விடுகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் சம்பந்தமில்லாமல் நின்று கொண்டிருந்த மினி வேனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதற்காக இந்த நேரம் என்று கேட்டபோது பத்துக்கும் மேற்கொண்ட நபர்கள் அவர்களை அங்கேயே உட்கார வைத்து விட்டு பொருட்களை இலங்கைக்கு கடத்தியுள்ளனர். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் நடப்பதை வேறு என அவர்களை கடுமையாக மிரட்டி உள்ளனர்.
கடத்தல் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.