பிரைம் வீடியோவில் ஸ்னேக்ஸ் &  லாடர்ஸ் ( பரமபதம்) டிரெய்லர் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ந்தியாவில் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரான  ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரின் மனதைக் கவரும் டிரெய்லரை அக்டோபர் -09 ஆம் தேதி வெளியிட்டது. கல்யாண் சுப்ரமணியன் ( ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ்  தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா அல்கெமிஸ் & திவாகர் கமல்  ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இந்த டார்க் ஹியூமர் த்ரில்லரில் நவீன் சந்திரா , நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண் மற்றும் சாஷா பரேன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளதை பெருமையோடு அறிவிக்கிறது டிரெய்லர்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ஸ்னேக்ஸ் &  லாடர்ஸ் ( பரமபதம்)
ஸ்னேக்ஸ் &  லாடர்ஸ் ( பரமபதம்)

2000 ஆண்டு  மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த த்ரில்லர் கதைக் களம்.. நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. கடினமான வாய்ப்புகளினூடே லாவகமாக செல்லவும், சிக்கலான மர்மங்களை கட்டவிழ்க்கவும், தங்களின் மிக மோசமான தேர்வுகளை எதிர்கொள்ளவும் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படும் நான்கு பள்ளி நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்தியா உட்பட உலகம் முழுவதும்   ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது.

நான்கு பள்ளி மாணவ நண்பர்கள் -கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா – தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் நிகழ்வுகளின் ஒரு பார்வையை.. இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

ஸ்னேக்ஸ் & லாடர்ஸ்
ஸ்னேக்ஸ் & லாடர்ஸ்

“விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்!” என்கிறார் நவீன சந்திரா.

 

— மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.