கவிஞர் பா.விஜய்யிடம் சிக்கியது யாரோ.?

0

கவிஞர் பா.விஜய்யிடம் சிக்கியது யாரோ.?

திருச்சியைச் சேர்ந்த ‘அறம்’ ராஜா என்ற பசைப்பார்ட்டியை ஒரே அமுக்காக அமுக்கி, இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மேதாவி’ என்ற படத்திற்குப் பூஜை போட்டார் டைரக்டராகிவிட்ட கவிஞர் பா.விஜய். அத்தோட சரி, அதுக்குப் பிறகு ‘மேதாவி’யின் நிலைமை என்னாச்சுன்னு தெரியல. இதை கடந்த ஏப்ரல் 25 -மே 09 தேதியிட்ட ‘அங்குசம்’ இதழில் எழுதியிருந்தோம்.

இப்ப, இந்த வார சங்கதி என்னன்னா, ‘இந்திய சினிமாவுலேயே, ஏன் உலக சினிமாவுலேயே யாரும் எடுக்காத, எடுக்க முடியாத கும்மிருட்டுக் காடுகளில் பிரபுதேவா வைத்து படம் பண்ணப் போறேன்’ என கிளம்பியிருக்காராம் பா.விஜய். சினிமாவில் பாட்டெழுதவோ, மற்ற விசயங்களுக்கோ சென்னையிலிருந்து யார் தொடர்பு கொண்டாலும், “சினிமாப்பாட்டா ச்சீச்சீ..இனிமே என்னோட லெவலே வேற. நான் இப்ப கேரளாவுல செட்டிலாகிட்டேன். கும்மிருட்டுக் காட்ல படம் எடுக்காம தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்” என்கிறார்.  ”லேட்டஸ்டாக பா.விஜய்யிடம் சிக்கியிருப்பது யாரா இருக்கும்?” என யோசி க்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.