ஜில்லுன்னு சினிமா… படம் எப்பங்க வரும்?
ஜில்லுன்னு சினிமா… படம் எப்பங்க வரும்?
ஒரு ஹீரோயினை வச்சு படம் எடுக்குறதுக்குள்ள பலபேருக்கு நாக்குத் தள்ளிப் போகுது. ஆனா டைரக்டர் சுந்தர் பாலு என்பவரோ, வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தான்னு நான்கு ஹீரோயின்களை வைத்து ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து, இப்ப தான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “போராடி வா” என்ற பாடலை ரிலீஸ் பண்ணிருக்கார்.
“படம் எப்பங்க வரும்” என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அந்த நான்கு ஹீரோயின்களும்.
இதே போல் தெலுங்கில் கிரண் அப்பாவரம் என்ற இளம் ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்துள்ள அதுல்யா ரவியும் ”அடுத்த படம் நமக்கு எப்ப வரும்?” என காத்திக்கிட்டிருக்காராம்.