கெட்டுப்போன 1,200 கிலோ எடையுள்ள ஆடு,கோழி இறைச்சி பறிமுதல்….

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் என்பவர் மோயிசன் மட்டன் கடை என்ற பெயரில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக உணவுப்பாதுகாப்புத் துறைக்கு புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கடையில் இருந்த இறைச்சியை மாநகராட்சியில் சீல் வைக்கப்படாத ஆட்டு இறைச்சி முறையாக பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1,200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு அழிக்கப்பட்டது. கடையையும் பூட்டப்பட்டது. ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாக ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

—   ஷாகுல், படங்கள் : ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.