அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசத்தின் அடையாளம் விளையாட்டு ! விருதுகளால் திருப்பம் தந்த திருச்சி !

திருச்சியில் அடகு நகையை விற்க

நட்சத்திர ஹோட்டல் என்ற அடையாளம் மறைந்து, உற்சாகம் நிறைந்த பங்கேற்பாளர்களின் பெருந்திரள் சூழ விழாக்கோலம் பூண்டிருந்தது, திருச்சி கோர்ட்யார்டு பை மேரியாட் (சங்கம் ஹோட்டல்).

திரைப்பட நடிகரும், ராஜ்யசபா உறுப்பினரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான பத்மபூஷன் கமல்ஹாசன்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; ரோட்டரி இன்டர்நேஷனல் (2025-27) இயக்குநர், எக்செல் குழுமத்தின் தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் என  தமிழகத்தின் பெருமையாக மட்டுமின்றி, உலகளவில் தத்தமது துறைசார் திறமைகளால் தனி முத்திரை பதித்த உலக நாயகர்களான மும்மூர்த்திகள் பங்கேற்ற விழாவாக அமைந்திருந்தது முதற்சிறப்பு.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், மாணவர்களிடையே விளையாட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பாக செயல்படும் பெஃபி (PEFI) என்றழைக்கப்படும், PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA –வின் தமிழ்நாடு மாநில பிரிவின் ஒருங்கிணைப்பில், கமல் பண்பாட்டு மையத்தின் பங்களிப்போடு இந்த விழா நடைபெற்றது.

பள்ளிக்கூடத்திலேயே பி.இ.டி. வகுப்புகளின் முக்கியத்துவம் மறைந்து, வாயில் ஒரு விசிலையும் கையில் ஒரு குச்சியையும் கொடுத்துவிட்டு, ஆட்டு மந்தைகளைப்போல மாணவர்களை மேய்ப்பவர்களாக பி.இ.டி. வாத்தியார்களை ஆக்கிவிட்ட காலத்தில், அத்தகைய பி.இ.டி. வாத்தியார்களை பெருமைபடுத்தும் நிகழ்வாக, பி.இ.டி. வாத்தியார்களால் அடையாளம் கண்டு வார்ப்பு செய்யப்பட்டு வைரங்களாக மிளிர்ந்த மாணவர்களை பெருமைபடுத்தும் நிகழ்வாகவும் திட்டமிட்டதுதான் நிகழ்வின் ஆகச்சிறப்பு.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மொத்தம் 18 பிரிவுகளின் கீழ் 30 பேருக்கு விருதுகளை வழங்கினார்கள் என்று சொல்வதை விட, உடற்கல்வியில் அற்பணிப்பு, மேம்பாடு, பங்களிப்பு, வழிகாட்டுதல், விளையாட்டை ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தியவர் என்பது உள்ளிட்டு பல்வேறு வகைகளில் வழிநடத்தியவர்களை அடையாளம் கண்டு அந்தந்த பிரிவுகளின் கீழ் வழங்கியதும் தனிச்சிறப்பு.

‘பள்ளிக் குழந்தைகளின் உடல் திறன் செயல்பாட்டை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிதல்’ என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை திருச்சி தேசியக் கல்லூரியில் நிறைவு செய்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதன் தொடர்ச்சியாக, உடற்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அமைச்சரின் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக இருந்து வழிநடத்திய, திருச்சி தேசியக்கல்வியின் உடற்கல்வி துறை இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜிதான் இந்த விழாவை ஒருங்கிணைத்து வழிநடத்தினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அதனினும், பெஃபி (PEFI) யின் தமிழகப்பிரிவின் தலைவராக MMM முருகானந்தம் முன்னின்று நடத்திய இந்த விழாவை, அவரது எக்ஸெல் குழுமமும் மற்றும்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அனிதா டெக்ஸ்காட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் ஆகியோரின் பங்களிப்போடும்தான் இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

”ரோட்டரிக்கும் இந்த நிகழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் போலியோவை முற்றிலும் ஒழித்ததில் முக்கிய பங்கு ரோட்டரி அமைப்புகளுக்கு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், போலியோ இல்லாத உடல்திறன் பெற்ற இளைஞர்களால் சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.” என்பதாக பதிவு செய்தார் MMM முருகானந்தம்.

பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (PEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ராக்சிட்டி சர்வோதயா சங்கத்தின் சார்பில் கூத்தூர் ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளியின் முதல்வர் தயாளன் மற்றும் பெஃபி யின் சார்பில் MMM முருகானந்தம் ஆகியோர் கையெழுத்திட்டார்கள்.

திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழாசிரியர் நீலகண்டன் சுவைபட தமிழ்மாலை கொண்டு விருந்தினர்களை வரவேற்றார். பேராசிரியர் டி.பிரசன்ன பாலாஜியின் மகள் ஸ்ரீ ஸ்ருதி மொத்த நிகழ்வையும் ஆங்கிலம் தமிழோடு அழகு உச்சரிப்பில் ஆளுமையோடு தொகுத்து வழங்கினார்.

திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும்; திருச்சி தேசியக்கல்லூரி உடற்கல்வியியல் மாணவர்கள் குழுவாக இணைந்து நிகழ்த்திக்காட்டிய மௌன காட்சிகளும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

–              இளங்கதிர்

 


விருதுபெற்றோர் :
சிறந்த குழந்தைகள் அடையாளச் சின்ன விருது
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சிறந்த விளையாட்டு ஊக்குனர் விருது
முனைவர் செங்குட்டுவன்
விளையாட்டு மேம்பாட்டிற்கான பங்களிப்பு விருது
முனைவர் நரேஷ்
வாழ்நாள் சாதனையாளர் விருது
ஷீலா ஸ்டீபன், நாகராஜன், பிச்சைப்பா
சிறந்த பெண்ணிய உடற்கல்வியியல் ஆய்வாளர் விருது
முனைவர் சண்முக சுந்தரி
தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் விருது
பேராசிரியர் மோகனகிருஷ்ணன்
உடற்கல்வி அறிவியல் மேம்பாட்டு விருது
முனைவர் ராஜ்குமார் பழனியப்பன், முனைவர் அகிலா
சிறந்த உடற்கல்வி வேளாளர் விருது
–  மேரு
விளையாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர் விருது
முனைவர் தயானந்தன்
சிறந்த உடற் கல்வியியல் தன்னார்வலர் விருது
அபிஷேக்
சிறந்த உடற்கல்வியியல் இயக்குனர் விருது
முனைவர் ஹரிஹரராமச்சந்திரன்
உடற்கல்வியியல் துறையில் அர்ப்பணிப்பு மிக்க இயக்குனர் விருது
முனைவர் விஜய், முனைவர் அக்பர் அலி, முனைவர் வி முத்துக்குமரன்,
முனைவர் கே முருகேசன், முனைவர் பி ஜி ராஜா, முனைவர் அருள்ராஜா

ஊரகப் பகுதிகளில் விளையாட்டை மேம்படுத்தியதற்கான விருது
முனைவர் பிரகதீஸ்வரன்
ஜிம்னாஸ்டிக் துறையில் தூதருக்கான விருது
பி.ராகுல்
சிறந்த பயிற்றுனர்களுக்கான விருது
முனைவர் வினோத் நாதனி, திரு எம் ஆர் ராஜ்குமார்,
பிரவீனா கார்மல், முனைவர் விஜய், பிரான்சிஸ் சகாயராஜ்

சிறந்த உடற்கல்வியியல் வழிகாட்டுநர் விருது
ஆர் செல்லதுரை
சிறந்த தடகள காவல் துறை சார் விருது
வி. தினேஷ்
கபடி துறையில் சாதனை விருது
எம் அபினேஷ்


 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.