பொருளாதார நெருக்கடியில் இலங்கை!

0

பொருளாதார நெருக்கடியில் இலங்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மகிந்திர ராஜபக்சே மந்திரி சபையில் இருந்த 36 மந்திரிகள் உட்பட மகிந்திராவும் பதவி விலகும் கடிதத்தை அதிபர் கோட்டபய ராஜபக்சேவிடம் கொடுத்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மந்திரிகளின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட அதிபர் பிரதமர் மகிந்திரவின் விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 4 பேர் மந்திரிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட 24 மணி நேரத்தில் நிதி மந்திரியாகப் பொறுப்பேற்றவர் பதவி விலகினார். மகிந்திர கட்சியின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் மகிந்திராவின் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது என்றாலும் ஆட்சியிலிருந்து மகிந்திரா நீக்கப்படவில்லை.

“பெரும்பான்மையை இழந்துவிட்ட மகிந்திராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்று இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசா தெரிவித்துள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்கு நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. இதன் தொடர்பாக கடந்த 14 நாள்களுக்கு மேலாக இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகுமாறு வலியுறுத்தப்படுகின்றது. இதில் சிங்களவர்கள், பௌத்தத் துறவிகள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி ஒற்றுமை உணர்வுடன் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட் டுள்ளது. அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்துள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே வின் தவறான கொள்கை மற்றும் நிதி நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தாமையே காரணம் என போராட்டங்களில் முழக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகல் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மாணவர் போராட்டம் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்தின் முன் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தி காவல்துறை மாணவர்களை கலைத்தது.

இலங்கையில் அதிபர், பிரதமர் என அதிகாரப் பதவிகளில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு செல்லுங்கள்’ இலங்கையில் ஜாதி, மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் தற்போது ராஜபக்சே அரசுக்கு முதுகு வளைத்துள்ளதாகவும், வரும் காலங்களில் போராட்டம் தீவிரமடையும்” என்றும் அவர்கள் முழக்க மிட்டனர் புரட்சியை நோக்கிய போராட்டம் என்ற பெயரில் இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசா தலைமையில் கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் கோத்தபய மற்றம் மகிந்திரா பதவி விலகி தேசிய அரசு அமையவேண்டும் என்று பேரணியில் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. மகிந்தா பேரணியின் முழக்கம் குறித்து பேசும்போது, தேசிய அரசு அமைந்தால் என் தலைமையில்தான் அமையவேண்டும்” என்று தெளிவுபட கூறினார். கோத்தபய பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் புறம் தள்ளினார். இலங்கையில் நாளுக்குநாள் போராட் டங்கள் வலுத்து வருகின்றன.

 

சுடசுட தேனீர், மரவள்ளி கிழங்குடன் தொடரும் போராட்டங்கள்: 

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க இலங்கை அரசு உலகநாடுகளிடம் நிதியுதவி கேட்டு அலைந்து கொண்டிருக்கின்ற நிலை தொடர்ந்து கொண்டி ருக்கின்றது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வேருக்குத் தண்ணீர் பாட்டில்கள் தன்னார்வ தொண்டர்களால் வழங்கப் பட்டன. தினமும் சுடசுடத் தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ தொண்டர் களினால் வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

சீரற்ற வானிலையையும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, உடலை வாட்டும் குளிரில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசுக்கெதிரான இந்தப் போராட்டங்கள் தமிழர் பகுதிகளை உள்ளடக்கிய இலங்கையின் அனைத்து பகுதிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


போராட்டங்களால் இலங்கையின் பொருளா தார நெருக்கடிகளுக்குத் தீர்வு ஏற்படுமா? என்ற கேள்வியே உலக அரங்கில் முதன்மையாக உள்ளது என்றால் மிகையில்லை

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.