காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ ! குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..!

RS Prabu

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..!

 

முதன்முறையாக கல்லூரியில் படிக்கும்போது 2007-ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறினோம். அப்போது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், மலை மேல் உள்ள சுயம்பு சிவலிங்கமும் ஒரு சாதாரண வழிபாட்டுத் தலங்களாக இருந்தன.
அப்போது பெரிதாகக் கூட்டம் இருக்காது. அடிவாரத்தில் இரண்டு மூன்று தேநீர் கடைகள் மட்டுமே. மேலே முதல் மலை ஏறியவுடன் படிக்கட்டுகள் முடிந்துவிடும். அங்கு மட்டுமே ஒரு கடை இருக்கும். மலையில் வரும் நீரைப் பிடித்து கோலி சோடா அடித்துத் தருவார்கள். மற்றபடி வேறு எதுவுமே இருக்காது. பிளாஸ்டிக் என்ற பேச்சே எங்கும் இருக்காது. அவ்வளவு ஒரு தூய்மையான, அழகான சுற்றுச்சூழல் கொண்டது வெள்ளியங்கிரி மலை.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

முக்கால்வாசி தூரம் கடந்த பிறகு ஒரு சுனை வரும். எலும்பை உறைய வைக்கும் குளிர் கொண்ட அந்த சுனையில் குளித்துவிட்டு மலை ஏறுவது இன்னொரு சாகசம். ஏனெனில் ஆறாவது மலைக்கு அப்பால் பனிக்காற்றும், குளிரும் இரவில் பின்னி எடுக்கும். பற்கள் மோர்ஸ் கோடு அடிக்க ஆரம்பித்துவிடும்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

15 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அம்மலை ஏற வாய்ப்பு அமைந்தது. இரவு 11.30 மணிக்கு அடிவாரத்தில் இருந்து ஏற ஆரம்பித்தோம். எப்படியும் 3000 பேர் அன்று மட்டும் ஏறியிருப்பார்கள். குறுகலான இடங்களில் நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொருவராக நின்று ஏறுமளவுக்குக் கூட்டம். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி உண்டு. ஆனால் மேலே ஒட்டியிருக்கும் லேபிளை நீக்கி விட வேண்டும், பிஸ்கட், கடலை மிட்டாய் பாக்கெட்டுகளின் பிளாஸ்டிக் உறைகளை நீக்கிவிட்டு செய்தித்தாள் அல்லது காகிதத்தில் சுருட்டி எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி என்று முன்னர் சென்று வந்த நண்பர்கள் சொல்லியிருந்தனர். அதன்படி முன்னேற்பாடுகள் செய்துகொண்டோம்.

3
காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ !
காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ !

 

அடிவாரத்தில் யாருடைய பைகளையும் சோதிக்கவே இல்லை. பத்துக்கு இரண்டு பேர் பைகளைப் பார்த்துவிட்டு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். யாருக்கும் கட்டணச்சீட்டு, டோக்கன் எதுவும் கிடையாது. மேலே செல்பவர்கள் யார், குறைந்தபட்சம் அலைபேசி எண் என எதுவுமே கேட்கப்படவில்லை. மொத்தத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் மேலே சென்றார்கள் என்ற கணக்கு எதுவும் வனத்துறையிடம் கிடையாது.

4

டார்ச்லைட் வெளிச்சம்பட்ட இடமெல்லாம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் உறைகள், மிட்டாய் காகிதங்கள், குளிர்பான டெட்ரா பேக்குகள், விதவிதமான பிளாஸ்டிக் உறைகள், பிய்ந்த செருப்புகள், ஷூக்கள், பிளாஸ்டிக் உணவு டப்பாக்கள் மட்டுமே தெரிந்தது. ஐந்தாவது மலை தாண்டும்போது வரும் சுனை அருகில் வர வர ஒரே துர்நாற்றம். வழியெல்லாம் சிறுநீர், மலவாடை. கழட்டி வீசப்பட்ட துண்டுகள், ஜட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், சோப்பு உறைகள் என குப்பைமயம். அந்த சுனையைத் தாண்டி ஓடிவிட்டால் போதும் என்ற அளவுக்கு கவுச்சி. அதில் எப்படி குளித்துவிட்டு வருகிறார்களோ என்று அருவருப்பாக இருந்தது.

மேலே அரை மணி நேரம் உறங்கிவிட்டு காலை ஆறரை மணிக்கு வெளிச்சம் வந்ததும் இறங்க ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் மெதுவாக இறங்குபவர்களுடன் வந்ததால் நிதானமாக புகைப்படம் எடுத்துக்கொண்டே வர முடிந்தது. மலைவாழ் மக்கள் மூலமாக அமைக்கப்பட்ட கடைகள் எண்ணிக்கை மொத்தம் 38. எண்ணிக்கை தவறிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கடையாக புகைப்படம் எடுத்துக்கொண்டே வந்தேன். ஒருவேளை 40 கடைகள் இருக்கக்கூடும்.

ஆறாவது மலையிலும் கடை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அந்த கடைகளுக்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் விதிமுறைகளும் கிடையாது. லேபிள் பிரிக்காத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், லெஹர் சோடா பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள், அத்தனைவிதமான மிட்டாய்கள் (கோப்பிக்கோ, சென்டர் பிரஷ், ஹால்ஸ் போன்ற பல) பிளாஸ்டிக் உறையில் வைக்கப்பட்ட இனிப்பு பண்டங்கள், குளுக்கோஸ் டப்பாக்கள், டெட்ரா பேக் குளிர்பானங்கள், பெப்சி, கோக் பாட்டில்கள் என அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை.

காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ !
காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ !

சிகரெட், பீடி மட்டும் இல்லை. ஆனால் குட்கா கிடைக்கிறது. வருபவர்களில் சுமார் 70% ஆட்கள் பக்த பொறுக்கிகள், தண்ணீர் குடித்து முடித்தவுடன் அந்த பாட்டில்களை அப்படியே வீசி எறிகிறார்கள். பிஸ்கட் தின்றவுடன் அந்த பிளாஸ்டிக் உறைகளை அப்படியே காற்றில் விடுகிறார்கள். செருப்பு, ஷூ, துண்டு, பனியன், பிளாஸ்டிக் காகிதங்கள் என எது தேவை இல்லையோ அதை அப்படியே வீசி எறிகிறார்கள். ஆறாவது மலையில் புல்வெளிகள் மட்டுமே உள்ள சோலைக்காடுகளின் சமவெளி ஆரம்பித்து விடுகிறது. அவை பூராவும் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே. ஏதாவது பாறை மீது ஏறிப் பார்த்தால் திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக் மட்டுமே. பாறைக்குக் கீழே எட்டிப் பார்த்தால் கண் கூசும் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள், குப்பைகள். வாரம் ஒரு கன மழை என்று வைத்துக்கொண்டால் கூட அடர்ந்த வனத்துக்குள் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் கணக்கிடவே முடியாது. இந்த 350+ புகைப்படங்களில் தெரிவது அங்கு கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் 5% அளவைக் கூட எட்டாது என்றால் அதன் தீவிரத்தன்மையைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சீசன் முடிந்தவுடன் எத்தனை தன்னார் வலர்கள் சென்றாலும் அங்கு கிடைக்கும் குப்பைகளின் 50 விழுக்காட்டைக் கூட எடுத்து விட முடியாது. அந்த அளவுக்கு புதர்களுக்குள், பாறைகளுக்குள் நீக்கமற கிடக்கின்றன. முயல் வடிவத்தில் ஏதாவது ரோபோ செய்து பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளவிட்டாலும் இனிமேல் அவை கிடக்கும் இடங்களை Reach பண்ணவே முடியாது. மலை மீது கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை ஒன்றுவிடாமல் அப்படியே அள்ளி எடுக்க முடியும் என்றால் அவை நிச்சயமாக 8-10 லாரிகள் நிரம்புமளவுக்கு லோடு ஏற்ற முடியும். இதில் மிக முக்கியமான Culprit நமது வனத்துறைதான்.

இரண்டு மூன்று கணினி ஆப்பரேட்டர்களை வைத்து ஒரு excel sheet-இல் மேலே ஏறுபவனிடம் செல் நம்பர் வாங்கிக்கொண்டு எத்தனை பாட்டில், உறைகள் இருக்கிறது என்று கணக்கெடுத்து அனுப்பிவிட்டு, கீழே வரும்போது செல் நம்பரை சொல்லி பாட்டில், பிளாஸ்டிக் கவர்களின் எண்ணிக்கையைக் காட்டிவிட்டு செல்ல அனுமதித்திருக்க வேண்டும். எண்ணிக்கை குறையும் பட்சத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்றால் போனது எல்லாம் அப்படியே கீழே வந்திருக்கும். மலைவாழ் மக்கள் மூலமாக நடத்தும் கடைகளின் மூலம்தான் பெரும்பகுதி பிளாஸ்டிக் குப்பைகள் வந்து சேர்கிறது. ஒரு கடைக்கு இவ்வளவு என்று கமிஷன் வாங்கிக்கொண்டு கடை வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள் போலும். காசைக் கொடுத்துவிட்டு, காட்டை அறுத்துக்கோ என்ற கான்செப்ட் தான்.

கோயமுத்தூரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட IFS அதிகாரிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். தங்களுடைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் என்ன நடந்தாலும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்று எப்படி இவர்களால் உட்கார்ந்திருக்க முடிகிறதோ. கோவில் ஊழியர்கள், உள்ளூர் மக்களைத் தவிர மற்றவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற நிரந்தரமாகத் தடை விதிப்பது மட்டுமே மிச்சமிருக்கும் காட்டையும், வனவிலங்குகளையும் நிம்மதியாக வாழ வைக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைகள் எவ்வளவு முக்கியமான உயிர்ச்சூழல். அவற்றை மாநகராட்சி குப்பைக் கிடங்கு மாதிரி ஆக்கி வைத்திருக்கிறார்கள். அதை ஊக்குவிப்பது நமது வனத்துறையே. எவ்வளவு விதிமுறைகள் போட்டாலும், அறிவுரைகள் சொன்னாலும் நம் மக்களும் கேட்க மாட்டார்கள். பொது ஒழுங்கு என்பது நமக்கு அடிப்படையில் இல்லாத பழக்கம் என்றாகிவிட்டது.

– RS Prabu

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.