துறையூர் – புனித மரிய மதலேனாள் திருத்தல தேர் திருவிழா கோலாகலம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையத்தில் கிறிஸ்தவ புனித மரிய மதலேனாள் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தளத்தில் வருடம் தோறும் மிகவும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இதில் இந்து, முஸ்லிம் , கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வர். அதேபோல் இந்த வருடத்திற்கான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள புனித மரிய மதலேனால் திருத்தளத்தில் புனித திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நேற்று முன்தினம் ஏழு சப்பரங்கள் திருவீதி உலா நடைபெற்று  வாண வேடிக்கை நடைபெற்றது.  திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று  ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றதைத்தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் கோட்டப்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

இதில் கோட்டப்பாளையத்தை சுற்றியுள்ள வைரிசெட்டிபாளையம், வளையப்பட்டி, ஒக்கரை , மாராடி , உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல், சேலம் , பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர்  உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த   ஹிந்து , முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மதபாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து வழிபட்டு   தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் இந்த திருத்தேர் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மரிய மதலேனாள் எனும் மாதா எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று  நடைபெற்ற தேர்திருவிழாவில் ஏராளமான அனைத்து மதத்தினர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.