ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3.   36 வது வார்டுக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரணம் நிலையம் அமைத்து தரக்கோரி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற  உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர் .

மேலும் இதனையடுத்து 36-வது வார்டுக்கு உட்பட்ட அரியமங்கலம் கொங்கு நகர் பகுதியில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு  மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் முன்னிலையில் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Srirangam MLA palaniyandi birthday

அடிக்கல் நாட்டு விழாஇதனையடுத்து 36 வது வார்டுக்குட்பட்ட  தாய்மார்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரையாற்றியதாவது இந்த கட்டிடத்தை எப்பொழுது முடிக்கப்படும் என்று அதிகாரியிடம் கேட்ட பொழுது நான்கு மாதத்திற்குள் முடித்து தரப்படுவதாக கூறியுள்ளனர் என்றும். இந்த பணிகளை விரைவாகவும் தரமான கட்டிடமாக வேலைகள் முடிக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 24 அன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தொகுதியினுடைய செல்லப்பிள்ளை என்பதை தாண்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தாய்மார்கள் ஆகிய உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் ஐந்து வயதிற்கு மேற்பட்ட நமது வீட்டுப் பிள்ளைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் தாய்மார்கள் ஆகிய நீங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் குழந்தைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறக்கூடிய முதல்வரை தான் நாம் பெற்றிருக்கிறோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அடிக்கல் நாட்டு விழாநான் முதல்வன் திட்டம் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நமது தமிழக முதல்வர் மீண்டும் ஒரு முத்தாய்ப்பான திட்டமாக வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அந்த திட்டம் என்னவென்றால் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் சரி தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு என தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு அந்த பயிற்சியின் வாயிலாக அவர்களுக்கு என ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கி அதை உறுதி செய்யக்கூடிய முதல்வரை தான் நாம் பெற்றிருக்கிறோம்.

அடிக்கல் நாட்டு விழாஎனவே நமது தமிழக முதல்வர் பல்லாண்டு வாழ வாழ்வாங்கு நாம் வாழ்த்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மு மதிவாணன்  36 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான  கே .கே. கே. கார்த்திக்  மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன் ,இளநிலை பொறியாளர் ஜோசப் ,நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர் சுரேஷ் கண்ணன் மற்றும் காட்டூர் பகுதி செயலாளரும்மாமன்ற உறுப்பினருமான நீலமேகம், 36 மற்றும் 36(அ) வட்டச் செயலாளர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்த் ,37 (அ)வது வட்ட செயலாளர் தவசீலன் 37-வது வட்டச் செயலாளர் விஸ்வநாதன் மற்றும் தங்கவேல், கதிர்வேல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.