அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இவர்களைப் பற்றி குழந்தைகளிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும் !

சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? தொடர் – 04

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஆட்டிசம் (autism spectur) உள்ளவர்களின் அறிவு சார்ந்த அளவீடு :

ஆட்டிசம் (Autism Spectrum Disorder) என்பது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் ஒரு மாறுபாடாகும். இந்த நிலையில் உள்ளவர்கள் தனித்துவமான சவால்களை எதிர்கொண்டாலும், அவர்களின் கவனம், நேர்மை மற்றும் படைப்பாற்றல் போன்ற பல சிறப்பம்சங்கள் அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகின்றன. அசாத்தியமான நினைவாற்றல் மற்றும் கவனம், அவர்கள் செய்யும் செயல்களில் அசைக்க முடியாத கவனம் (Hyper-focus) செலுத்துவார்கள். எந்தவொரு தகவலையும் மிக ஆழமாகவும் நீண்ட காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சிறப்புத் திறன்களாகக் கருதப்படும் கணிதம், அறிவியல், இசை, கலை அல்லது கணினி போன்ற துறைகளில் இயல்பாகவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். சில துறைகளில் நிபுணர்களாகவும் மிளிருவார்கள்.கூர்மையான காட்சி மற்றும் செவிப்புலன் திறன் (Sensory Strengths), சாதாரணமானவர்கள் கவனிக்காத சிறிய விவரங்களைக் கூட அவர்களால் துல்லியமாக கவனிக்க முடியும். சிறந்த காட்சி அல்லது செவிவழி கற்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் பெரும்பாலும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் பொய் சொல்வதோ, மறைமுகமான உள்நோக்கங்களோ இவர்களிடம் அரிது. வலுவான நீதி உணர்வுடனும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மிகவும் வருந்துவார்கள். நேர்மை மற்றும் சரியான விஷயங்களுக்காக மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் குரல் கொடுப்பார்கள்.

கார்த்திகா கவின் குமார்
கார்த்திகா கவின் குமார்

யாவரும் கேளீர்

முறையான திட்டமிடலுடன், ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை (Routine) சரியாகப் பின்பற்றுவதில் சிறந்தவர்கள். எந்த வேலையையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடிப்பார்கள். புதிய சிறப்புமிக்க ஆட்டிசம் நிலையில் உள்ள சிறுவர்கள் சமூகத்தின் பொது புத்தி அடிப்படையில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்களைக் குறித்து நாம் கதைகளின் வழியாக சிறுவர்களிடையே புரிதலை ஏற்படுத்த  வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் குறித்த மனித அளவீடு :

மாற்றுத்திறனாளிகள் உடல் மற்றும் மனரீதியான தடைகளைத் தாண்டி, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். உறுதியான இலக்கு மற்றும் விடாமுயற்சி மூலம் உலகளவில் புகழ்பெற்ற பல வெற்றியாளர்கள் நம்மிடையே வாழ்ந்து சாதித்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர்

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோல்லா போலியோவால் பாதிக்கப்பட்டவர். சர்வதேச பாரா – ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக நானூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

பல்வேறு இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் உலக அரங்கில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் ஓட்டப்பந்தயம், நீச்சல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்

நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், அண்டவியல்  மற்றும் கருந்துளைகள்  குறித்த மிகச்சிறந்த ஆய்வுகளை உலகிற்கு அளித்தார். ஹெலன் கெல்லர்  கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், உலகின் முதல் பெண் எழுத்தாளராகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைக் குரலாகவும் இருந்துள்ளார். பல்வேறு நூல்களையும்  எழுதியுள்ளார்.

இப்படி பல்வேறு சாதனையாளர்கள் தங்களின் மாற்றுத்திறனாள் சமூகத்தை மாற்றி உள்ளனர். இவர்களைக் குறித்து உள்ள பொதுப் புத்தியை  சமூகத்தில் மாற்றி விதைக்கவும், அவர்களை உணர்ந்து அவர்களுக்கேற்ற  சூழலை அமைத்து தருவதில்  மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பினை  கதைகள் வழி பேச வேண்டிய தேவை இருக்கிறது.

(தொடரும்)

— கார்த்திகா கவின் குமார், எழுத்தாளா், கதைசொல்லி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.