புகைப்பதனால் ஏற்படும் பக்கவாதம்

விழிக்கும் நியூரான்கள் -11

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பக்கவாத நோயினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான மதுப் பழக்கத்தைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். மற்றொரு காரணியான புகை பழக்கத்தை பற்றி பார்ப்போம்.

மதுப் பழக்கத்தை விட பல மடங்கு தீமையை விளைவிக்க கூடியது இந்த புகைப்பழக்கம். புகையிலையானது பீடி, சுருட்டு, வெண்சுருட்டு (சிகரெட்) மற்றும் மூக்குப்பொடி போன்ற எந்த வடிவில் இருந்தாலும் நமக்கு ஆபத்தே!. புகையிலையில் இருக்கும் நிக்கோடினானது பற்களில் படிந்து கருப்பாக மாறுவது போல, நம் நுரையீரலிலும் படிந்து பாதிப்பை உண்டாக்குகிறது. குறிப்பாக, உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனின் உள்ளிழுக்கும் திறனைக் குறைக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இயங்குவதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் நாம் இல்லை. அப்படியிருக்க, உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் தடைப்பட்டால் என்னாவது?

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

நிக்கோடினானது நுரையீரல் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பல விதமான புற்றுநோய்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்த குழாய்களை அடைத்து உயிரையே காவு வாங்கி விடுகிறது.

போதைப் பொருட்களான கஞ்சா, மார்ஃபின், நகப்பூச்சு (Nail polish) மற்றும் சிலவித வண்ணபூச்சுகள் (Paint Thinner) போன்றவை நம் மூளையை அதற்கு ஏற்றாற்போல மாற்றக்கூடியவை. இந்த போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் சாதாரணமாக தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்லை. அந்த போதைப் பொருட்களை அடைவதற்கு தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்வதற்கு அவர்கள் சிறிதும் தயங்குவதில்லை. இதனால் தான் விபத்துக்கள், கொலை, கொள்ளை என பல சீரழிவுகள் நடந்த வண்ணம் உள்ளன. இவை ஏன் நடக்கின்றன?

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நம் மூளையில் அடிக்ஸன் சென்டர் (Addiction Centre) மற்றும் ரிவார்டு சென்டர் (Reward Centre) என்ற இரு பகுதிகள் உள்ளன. பாராட்டுக்கள் மற்றும் நமது வெற்றிகள் ஆகிய அனைத்தும் ரிவார்டு சென்டரை தூண்டுகிறது. மது மற்றும் புகையிலை போன்ற அனைத்து போதைப் பொருட்களும் அடிக்ஸன் சென்டரை தூண்டிவிட்டு நம்மை அதற்கு அடிமைப்படுத்துகிறது. பல ஆண்களுக்கு மரபணுவிலேயே இவ்வித போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் தன்மை உள்ளொளிந்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால் தான் இப்பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அதை நிறுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Dr. அ.வேணி MD., DM (NEURO)

மூளை நரம்பியல் நிபுணர்.

சிலர், ‘நான் சிறிது சிறிதாக குறைத்து இப்பழக்கத்தை முழுவதுமாக விட்டு விடுகிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களால் என்றுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியாது. தீய பழக்கங்களை கைவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அந்த நொடியே அனைத்தையும் விட்டு விட வேண்டும். சிறிது சிறிதாக குறைத்து விடுவது என்பது எப்போதுமே நடவாத காரியம்.

மது, புகை மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு கொண்டுவருவதற்கு, முதலில் அந்த நபரானவர் தான் இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக நினைக்க வேண்டும். (de – addiction) என்ற மருத்துவ முறையின் மூலமும், குடும்பத்தினரின் அன்பும், அரவணைப்பும் இருந்தால் நிச்சயமாக போதைப் பழக்கதிலிருக்கும் நபரை அதிலிருந்து விடுவிக்க முடியும். அப்படி போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வரும் நபர்களுக்கு, அந்த பழக்கத்தை தூண்டக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தரக் கூடாது.

ஆறறிவு கொண்ட மனிதன் தனக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் பணம் கொடுத்து மது, புகை மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பக்கவாத நோயால் அவதியுற்று வாழ்வின் அனைத்து இன்பத்தையும் இழக்க வேண்டுமா! என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.