இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் !
இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை. போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இயங்கிவரும் மதரஸாவில் அரபி பாடம் கற்றுத்தரும் ஆசிரியராக கடந்த 2019 ஆம் ஆண்டு பணிபுரிந்தவர் சாகுல் அமீது (43). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரிடம் அரபிக் பாடம் கற்றுகொள்ள வந்த இளையான்குடியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சாகுல் ஹமீது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட சாகுல் ஹமீதுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
– பாலாஜி