திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை (4.05.2023) நடக்கிறது. திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையொட்டி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பூச்செரிதல் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம்.கே காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் உலகநாதபுரம் அம்மன் கோவிலை நோக்கி வீதி உலா வருகிறது .

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

6-ந் தேதி காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னி சட்டி எடுத்து வரப்படுகிறது. 11 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் ,மாலை 4 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. 7 – ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு 2000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோயிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் நடக்கிறது .மாலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் அருகில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

விழாவுக்கான ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச் சங்கத்தின் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் பொறுப்பாளர்கள் சண்முகம், மதியழகன், பால்ராஜ், ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.