‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சசிகுமார் நடிப்பில்,  இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த  ‘நந்தன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நந்தன்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர்.  ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர்  என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Rajinikanthபடத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி  பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்த்தவுடன்  நடிகர் சசிகுமார் – இயக்குநர் இரா . சரவணன் – விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நந்தன் மிகத் தரமான.. தைரியமான… படம்’ என மனம் திறந்து பாராட்டினார்.

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘நந்தன்’  டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவிக்கின்றது.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.