சீட் தராவிட்டாலும் பரவாயில்லை… திமுகவை ஆதரிக்கிறோம்… – முருகவேல் ராஜன்
திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு சீட் வழங்காதது குறித்து மதுரையில் அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் அளித்த பேட்டியில் திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு சீட் தருவதாக தொகுதி பங்கீட்டு குழுவினர் தெரிவித்தார்கள். ஆனால் எங்களுக்கு சீட் தராதது மிகுந்த மனவருத்தத்தைதை ஏற்படுத்தியுள்ளது.
தென்னகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாக மக்களுக்காக இயங்கி வரும் எங்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அதற்காக வாரியம் போல அதிகார மிக்க அரசு பொறுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
காங்கிரசு, தேமுதிக கட்சிகளுக்கு சீட் பிரித்துகொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் 164தொகுதிக்கு கீழ் போட்டியிட முடியாத நிலையில் திமுக உள்ளது என்றார்கள் அதிமுகவை கேடயமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக தமிழ்நாட்டிற்குள் காலூன்றி விடும்
திமுக ஆட்சிதொடர்ந்தால் தான் தமிழ்நாடு பட்டியலின சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் திமுகவுக்கு ஆதரவு தொடர்கிறோம். சீட் தரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் திமுக கூட்டணிக்கு மக்கள் விடுதலை கட்சி ஆதரவு அளித்துகளப்பணி ஆற்றுவோம். சீட் தராவிட்டால் பரவாயில்லை, தேநீர் விருந்துக்குகூட ஏன் எங்களை அழைக்கவில்லை? தலைமை எங்களை அழைக்க சொல்லியும் விருந்துக்கு அழைப்பதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்ட நபர் நிர்வாக தவறுதலாக அழைக்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
தேவேந்திர குல வேளாளர் மக்களை திமுக, அதிமுக இருகட்சிகளும் புறக்கணிப்பதாக எங்கள் சமுதாய மக்கள் கருதுகிறார்கள். தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான அங்கீகாரம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணங்களை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் பிரதிபலிப்பார்கள். அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனுக்கு 1 தொகுதி தான் கொடுத்துள்ளார்கள். வெற்றி வாய்ப்பில்லாத ராஜபாளையம் தொகுதியை கொடுத்துள்ளார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாய மக்களின் குரல் சட்டமன்றத்தில் பிரதிபலிக்க கூடாது என திட்டமிட்டு எங்களை திமுக, அதிமுக புறக்கணிக்கிறது. வட மாவட்டத்தில் இருந்து ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் குரலாக விசிக பிரதிநிதிகளால் குரல் எழுப்ப முடியும். ஆனால், அதேபோல அருந்ததியர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களையும் பிரதிநித்துவப்படுத்த வேண்டும்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.