பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் !
இந்திய விடுதலை நாள் பரிசு. இந்திய விடுதலை நாளன்று மாநிலத் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974இல் பெற்றுத் தந்தவர் அப்போதைய முதலமைச்சரான கலைஞர் மு.கருணாநிதி. 15.08.1974 அன்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு ராஜாஜி மண்டபத்தில் விருந்தும் அளித்துள்ளார்.
அந்த விருந்தில் கலந்துகொண்ட செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோது, “இன்றைய விருந்தைப் பற்றி உங்களுடைய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் என்னிடம் கூறும்போது, நிருபர்களை அழைத்து, முதன்முதலாக ராஜாஜி மண்டபத்தில் நடைபெறுகிற விருந்து இதுதான் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் நடைபெறுகிற பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகின்றன என்பதை அறிகிற நேரத்தில் இது ஏதோ ஒரு கட்சிக்குரிய பெருமையாகக் கருதாமல், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய பெருமையாக நாம் இந்த நாளில் கருதிக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
— செல்லப்பா நம்பி





Comments are closed, but trackbacks and pingbacks are open.