தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழ்நாடு நாள் விழா
விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு என மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளை நினைவுகூரும் வகையில் தஞ்சையில் இன்று (ஜுலை 18) மாணவ, மாணவியர் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தஞ்சை பனகல் கட்டடம் முன்பாக துவங்கிய இவ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...


இப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘ பிற மொழிக் கலப்பின்றி தனித் தமிழ் மொழியைப் பயன்படுத்துவோம்’, ‘தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக நம் முன்னோர் செய்த தியாகங்களை நினைவு கூர்வோம்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

3

இறுதியில், பேரணி அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.


இதைத் தொடர்ந்து, அங்கே தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

4

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தொடர்பாக தஞ்சை மாவட்ட மாணவ, மாணவியர்க்கு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்,  முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.