தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து ‘இளம் அறிஞர் விருது’ பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் காலனியில் வசிப்பவர் முனைவர் உ.பாலசுப்பிரமணியன் (48). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அகராதியியல் (Lexicography) துறைத் தலைவர் மற்றும் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இந்நிலையில், பேராசிரியர் பாலசுப்பிரமணியன் மார்ச் 15 (புதன்கிழமை) மாலை பணிமுடிந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வழக்கம்போல தனது காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவரது காரை வழிமறித்து நிறுத்திய மர்ம நபர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடுமையாகத் தாக்கப்பட்டதில் அவரது தலையில் கொடுங்; காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் மயக்க நிலையிலேயே இருந்து வருகிறார். அதனால் இச்சம்பவம் குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, வாக்கு மூலம் பெற முடியவில்லை என்கின்றனர் போலீஸார்.


பேராசியர் பாலசுப்பிரமணியனுக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகை அல்லது முன்விரோதம் இருப்பதாக தெரியவில்லை. அவர் தாக்கப்பட்டதற்கு வேறு ஏதாவது ‘சிறப்பு காரணங்கள்’ இருக்கலாம் என்கின்றனர் போலீஸார்.

இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீஸார் இன்னும் வாக்குமூலம் பெறாததால், அவர் தாக்கப்பட்டதற்கான காரணம், அவரை தாக்கிய நபர்கள் யார் என்ற விபரங்கள் தெரியவில்லை.

அவர் மயக்கம் தெளிந்து வாக்குமூலம் அளித்தால்தான் சம்பவத்தன்று என்ன நடைபெற்றது என்பது முழுமையாகத் தெரிய வரும் என்கின்றனர் போலீஸார்.
ஆசிரியத் தொழிலில் சுமார் 18 ஆண்டுகள் அனுபவமுள்ள பேராசிரியர் பாலசுப்பிரமணியன், தமிழ், மொழியியல், ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய 3 பாடங்களில் எம்.ஏ படித்துள்ளார். அதோடு, தமிழ் இலக்கணத்தில் முனைவர் பட்டம் (பிஎச்.டி) பெற்றுள்ளார்.

மேலும், இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து இளம் அறிஞர் (Young Scholar) விருது, கோவையைச் சேர்ந்த பாரதி அறக்கட்டளை வழங்கிய சிறந்த நூலுக்கான விருது, தஞ்சாவூர் தமிழிசை மன்றம் வழங்கிய தந்தை பெரியார் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய இலக்கய விருது என இதுவரை நான்கு விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.