பிரஸ் ஷோவில் இது புதுசு! ஹீரோயின் ரவுசு! டைரக்டர் கடுகடுப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவிப்ரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

வரும் ஜனவரி.02- ஆம் தேதி உலகமெங்கும் ‘தி பெட்’ வெளியாவதையொட்டி  டிசம்பர் 29- ஆம் தேதி  மாலை பத்திரிகையாளர்களுக்கான  சிறப்புக்காட்சி பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்பட்டது. படம் பார்க்க வருகை தந்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுத்த ‘தி பெட்’ படக்குழுவினர், அனைவருக்கும் வெள்ளை நிற பூத்துண்டு அணிவித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வரவேற்புடன் பத்திரிகையாளர்களை வரவேற்றது இதுதான் முதன்முறை. படம் முடிந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்  பேசியவர்களில் சிலரின் பேச்சு…..

*நடிகை திவ்யா   ஸ்ரீதர்*

“நான் கேரளாவைச் சேர்ந்த பெண். இந்தப் படத்தின் மூலம் தான் முதன்முதலாக தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளேன். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவின் அம்மாவாக நடிச்சிருக்கேன். இது கொஞ்சம் சவாலான, துணிச்சலான கதாபாத்திரம்தான். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக டைரக்டருக்குநன்றி. நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களைப் பேச வைக்கும்”.

இயக்குநர் மணிபாரதி

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருப்பதால் இந்த புரமோவில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை.ஆனால்  ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவை நாங்கள் இரண்டு முறை அழைத்தும் ஏனோ அவர் வரவில்லை.

இத்தனைக்கும் அவருக்கு முழு சம்பளமும் செட்டில் செய்து விட்டோம். ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் வந்திருப்பாரோ என்னவோ?” என கடுகடுப்பு டன் பேசிவிட்டு

“தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க  குறிப்பிடத்தக்க ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள்.

அவர்களை இந்தப் படத்தின் அம்மா கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. அழைத்தாலும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள்.. அப்படி சில நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால் தான் கேரளா சென்று ஒரு புதிய முகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். இவர் இனி கொஞ்ச காலத்துக்கு தமிழ் சினிமாவில் புதிய அம்மாவாக வலம் வருவார்”

என்றார் கூலாக .*தொழில் நுட்பக்குழு* ஒளிப்பதிவு: கே.கோகுல் இசை; தாஜ்நூர்,  எடிட்டிங்: ஜேபி தயாரிப்பு நிர்வாகி: பழனிச்சாமி

*மக்கள் தொடர்பு ; ஏ.ஜான்.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.