சக்சஸ் மீட்டும் கோல்டு செயின் சீக்ரெட்டும்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த செப்டம்பர் 18-ஆம் தேதி ரிலீசான படம் ‘தி டார்க் ஹெவன்’. சிறிய அளவிலான பட்ஜெட், புதுமுக ஹீரோ, ஹீரோயின், பிரபலமில்லாத டெக்னீஷியன்கள் இவர்களின் கூட்டணியில் உருவானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தியேட்டர்களின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, சூப்பர்ஹிட்டாகியுள்ளது ‘தி டார்க் ஹெவன்’. இதனால் மிகவும் ஹேப்பியான தயாரிப்பாளர்கள்  ஷரண், கோபால், டைரக்டர் பாலாஜி ஆகியோர் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்ச்சியை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்.22—ஆம் தேதி நடத்தினார்கள்.

ரித்விகா
ரித்விகா

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதில் ஹீரோ சித்து, ஹீரோயின் தர்ஷிகா, இன்னொரு ஹீரோயின் ரித்விகா, வேலராமமூர்த்தி, ஜெயக்குமார் மற்றும் டெக்னீஷியன்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும் போது, “அறுபது சதவிகிதப் படப்பிடிப்பை முடித்த பிறகு, ஹீரோ சேட்டை பண்ணியதால், கொஞ்சமும் கவலைப்படாமல் எடுத்ததை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, சித்துவை வைத்து மீண்டும் ஆரம்பித்த தயாரிப்பாளர்களின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

தர்ஷிகா
தர்ஷிகா

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அவர்களின் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் கிடைத்த இந்த வெற்றி, சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான பாதையைக் காட்டியிருக்கு” என்றார்.

சித்து, ரித்விகா, தர்ஷிகா, டைரக்டர் பாலாஜி, வேலராமமூர்த்தி உட்பட பேசிய அனைவருமே ரொம்பவும் உற்சாகமாகப் பேசினார்கள்.

தயாரிப்பாளர் கோபால் பேசும் போது, “ஏற்கனவே எடுத்து நொந்த கதையை ஓப்பனாகச் சொன்னார் டைரக்டர் பாலாஜி. அதன் பின் சித்துவை ஹீரோவாக கமிட் பண்ணலாம் என்றார். நானும் என்னிடம் இருந்த தொகையைச் சொல்லி, இதற்குள் முடிக்க முடியுமான்னு பாலாஜியிடம் கேட்டேன். அவரும் நம்பிக்கையுடன் வாக்குறுதி கொடுத்தார். வாக்கு கொடுத்தபடி படத்தை முடித்துக் கொடுத்தார். இன்னும் சொல்லப் போனால், நாங்கள் போட்ட பட்ஜெட்டில் கொஞ்சம் மிச்சப்படுத்தியும் கொடுத்தார். அந்த மிச்சமிருந்த தொகையில் தான் டைரக்டர் பாலாஜிக்கும் ஹீரோ சித்துவுக்கும் இந்த தங்கச் சங்கிலியைப் பரிசளிக்கிறேன்” எனச் சொல்லி இருவருக்கும் தங்கச் சங்கிலியை அணிவித்தார் தயாரிப்பாளர் கோபால்.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.