மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன் ! குளித்தலை பகீர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை அருகே கள்ளை சுக்காம்பட்டியில் மனைவியுடன் கள்ளக்காதல் ஈடுபட்ட கொத்தனார் செல்வத்தை கொன்று சடலத்தை கிணற்றில் வீசி சென்ற கொலையாளி சந்துக்கடை வெள்ளைச்சாமி கைது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கள்ளை சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் கொத்தனார் செல்வம் வயது 45. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி பிரிந்து விட்ட நிலையில் செல்வம் அவரது தாய் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந் நிலையில் கொத்தனார் செல்வம் கடந்த 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை படுத்திருந்த அறைக்கு செல்வத்தின் மூத்த மகன் கபிலன் சென்று பார்த்த போது கட்டிலில் ரத்தக் கரைகள் இருப்பதோடு அருகாமையில் உள்ள கேணி வரை சடலத்தை இழுத்துச் சென்று வீசி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தை உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

கொலையாளி வெள்ளச்சாமி
கொலையாளி வெள்ளச்சாமி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதனை அடுத்து தோகைமலை காவல்துறை மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனன், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்களை ஆய்வு செய்தனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பின்னர் செல்வத்தின் உடல் அன்று மாலை சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையில் சுக்காம்பட்டி குடித்தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் வெள்ளைச்சாமி வயது 40. இவரது மனைவி ஜெயமணி வயது 35.. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
வெள்ளைச்சாமி அந்த பகுதியில் சந்து கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வெள்ளைச்சாமியின் மனைவி ஜெயமணிக்கும் இறந்து போன செல்வத்திற்கும் தகாத உறவு இருந்து வந்ததால்
ஆத்திரம் அடைந்த வெள்ளைச்சாமி கடந்த 6 ஆம் தேதி சனிக்கிழமை இரவு செல்வம் படுத்திருக்கும் அறைக்கு சென்று கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தை தாக்கி கொலை செய்து சடலத்தை இழுத்து சென்று அருகாமையில் உள்ள வைரப்பெருமாள் என்பவரது பாசன கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளது.  போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து வெள்ளைச்சாமியை கைது செய்த தோகை மலை போலீசார் இரவு குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் குற்றவியல் நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

-நௌஸாத்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.