அங்குசம் பார்வையில் ‘குட்நைட்’ திரைப்படம் !

0

அங்குசம் பார்வையில் ‘குட்நைட்’

தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி. எண்டெர்டெயின்மெண்ட் யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பசலியான், நாசரேத் பசலியான். தமிழக ரிலீஸ்: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன். நடிகர்–நடிகைகள்: மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் , ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல். ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன், இசை: ஷான் ரோல்டன், பி.ஆர்.ஓ.யுவராஜ்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

குட்நைட் திரைப்படம்
குட்நைட் திரைப்படம்

சிலருக்கு கல்யாணம் நடப்பதே சோதனையாக இருக்கும். சிலருக்கோ கல்யாணம் நடந்த பிறகு சோதனைகள் நடக்கும். இந்த இரண்டையும் சேர்த்து சந்திக்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த ‘குட்நைட்’. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் மணிகண்டன், அம்மா, அக்கா, தங்கை, அக்காவின் கணவர் ஆகியோருடன் வசிக்கிறார்.

- Advertisement -

மணிகண்டனுக்கு இருக்கும் பெரும் பிரச்சினையே தூக்கத்தில் பலத்த சத்தத்துடன் குறட்டை விடுவதுதான். இந்த குறட்டையால் ஒரு பெண்ணுடனான லவ் கட்டாகிறது. வாட்டர் பியூரிஃபையிங் சர்வீஸ் பண்ணும் தனது அக்காள் கணவன் பிரபுதிலக்குடன் பாலாஜி சக்திவேல் வீட்டிற்கு போகும் போது, அவர்கள் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் மீத்தா ரகுநாத் தை சந்திக்கிறார், காதல் வசப்படுகிறார்.

வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார். “சினிமா பிடிக்குமா” என ஃபர்ஸ்ட் நைட்டில் மீத்தாவிடம் கேட்டதும் “அந்த சத்தமே எனக்கு ஒத்துவராது ” என்கிறார். அப்போதே கெதக்குன்னு ஆகிவிடுகிறது மணிகண்டனுக்கு. அதன் பின்னர் வரும் இரவுகள் மணிகண்டனின் குறட்டை மால் மீத்தாவின் தூக்கத்தைத் கெடுத்து உடல் நலனை பாதிக்கிறது. இதனால் தன்னைத் தானே நொந்து கொண்டு கோபத்தைக் காட்ட தம்பதிகளுக்குள் விரிசலாகிறது.

4 bismi svs
குட்நைட் திரைப்படம்
குட்நைட் திரைப்படம்

குறட்டை ஓய்ந்து குட்நைட் ஆரம்பமாச்சா என்பதற்கு விடை காண ‘குட்நைட்’ டை காணுங்கள். அப்பப்ப ஒரு படத்தில் நடித்தாலும் செமத்தியாக அசத்தும் மணிகண்டன் இதிலும் அசத்திவிட்டார். பெற்றோர் இல்லாமல் தனிமையில் வாழும் மீத்தாவின் கவலை முகம், எப்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் மனநிலை, மணிகண்டனை கல்யாணம் செய்த பிறகு சந்திக்கும் குறட்டை கொடூரம், தாம்பத்ய உறவில் விரிசல், மணிகண்டன் வீட்டாரின் சில கேள்விகள், மணியின் அக்கா ரேச்சல் ரெபேக்காவின் வளைகாப்பில் நடக்கும் அபசகுணத்தால் மனம் உடைவது, என எல்லா ஏரியாவிலும் நிறைவான, அளவான நடிப்பை தந்து நம் மனதில் பதிகிறார் மீத்தா ரகுநாத்.

குட்நைட் திரைப்படம்
குட்நைட் திரைப்படம்

மணிகண்டனும் ரமேஷ் திலக்கும் மச்சான்–மச்சினன் உறவு காமெடி, கலகலப்பு, சென்டிமென்ட் என்று சகலத்தையும் கலந்து கட்டி கலக்கியிருக்கிறார் கள். மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த அம்மையார், பாலாஜி சக்திவேல் தம்பதி ரேச்சல் ரெபேக்கா, மணியின் தங்கையாக நடித்திருக்கும் அனைவருமே குட் பெர்ஃபாமெர்ஸ். இசையும் ஒளிப்பதிவு ம் குட் ஃபீலிங் தருகிறது. அந்த குட்டி நாயைக் கூட கவனிக்க வைத்திருக்கும் டைரக்டர் இடைவேளை வரை பக்கா காமெடி டிராக்கில் படத்தை கொண்டு போகிறார்.

இடைவேளைக்கு பிறகு டிவி சீரியல்கள் போல செண்டிமெண்ட் சீன்களையு சில மூட நம்பிக்கைகளையும் நம்பிவிட்டார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லாம்.

படத்தில் நடித்த அந்த குடும்பமே பார்க்க வைத்த படம் என்றும் சொல்லலாம். ‘குட்நைட்’ குட் ஃபீல்.

-மதுரைமாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.