குளித்தலை பேருந்து நிலையம் விவகாரம் ! பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது !

0

குளித்தலை பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம், இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு நகராட்சி நிர்வாகம் தரை வாடகை கொடுத்து நடத்தி வருகிறது.
இந்த பேருந்து நிலையம் 1.22 ஏக்கர் ஆகும்.

குளித்தலை பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு
குளித்தலை பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு

பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவெடுத்தது. இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அரசு ரூ. 74 லட்சம் ஒதுக்கீடு செய்து.
அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து 1.22 ஏக்கர் நிலத்தை பல கட்டங்களாக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளதால் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். பல கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில்,

குளித்தலை ஆக்கிரமிப்பு அகற்றம்
குளித்தலை ஆக்கிரமிப்பு அகற்றம்

குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, நகராட்சி ஆணையர் மனோகர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை,
நகராட்சி ஆகியவை இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் முதல் சிறிய வீடுகள் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

குளித்தலை ஆக்கிரமிப்பு அகற்றம்
குளித்தலை ஆக்கிரமிப்பு அகற்றம்

அப்பொழுது பொது மக்களுக்கும் ஆர்டிஓ புஷ்பா தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் எடுக்காததால் சட்டப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக தெரிவித்த
ஆர்டிஓ புஷ்பா தேவி பிரச்சனைகள் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இதனை அடுத்து தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.