போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது
போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வடக்கு அயித்தம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). ஆடு மேய்க்கும் இவர் தனது வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது அங்குவந்த மர்மநபர் தன்னை முசிறி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு எனக்கூறி, “” நீ சரக்கு தானே ஓட்டுற? மாமுல் கொடு”” – என மிரட்டவும், அவர் தான் அதனை மறுத்து கூறவும் ஆத்திரமடைந்த மர்மநபர் தான் வைத்திருந்த சிறு கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பாக்கெட்டிலிருந்த ரூ. 1 ஆயிரத்தைப் பறித்து தலைமறைவானார். இதுகுறித்து அவரது புகாரில் முசிறி எஸ்ஐ. நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதில் போலி போலீஸ் ஏட்டான தொட்டியம் வடக்கு காலனி சித்தூரைச் சேர்ந்த நெடுஞ்செழியனின் மகன் பிரேம்குமாரை (29) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.