அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இராசியில்லாத இலால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன்…!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இலால்குடி சட்டமன்ற தொகுதியில், 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் அ.சௌந்திரபாண்டியன். சென்ற முறையும் இவருக்கு சீட் கொடுக்கக்கூடாது மாவட்டத்தில் அதிருப்தி கிளம்ப, தலைமையிடமே பேசி எப்படியோ சீட் வாங்கி வெற்றி பெறவும் செய்தார்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் நான்குமுறை ஜெயித்திருந்தும், அதில் ஒரு முறைகூட அமைச்சர் பதவிக்கான வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்த நிலையில், இந்தமுறை மீண்டும் போட்டியிடவே சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.

அடுத்து, தொடர்ந்து நான்குமுறை வென்றிருப்பதும் உண்மை. தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால், அவை எதுவும் அவரது சர்ச்சை பேசப்பட்ட அளவுக்கு, விளம்பரம் ஆகவில்லை என்கிறார்கள். காலம்போன கடைசியில், தற்போது தனது சாதனைகளை பேஸ்புக்கில் தினமும் பதிவிட்டு வருவதால் என்ன பிரயோசனம் என்ற கேள்வியையும் உடன்பிறப்புகள் எழுப்புகிறார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இதையெல்லாம் விட, தன்னைச்சுற்றி ”செவன்ஸ்டார்ஸ்” என்றழைக்கப்படும் ஏழுபேர் கூட்டணியைத் தாண்டி அவர் மக்களிடத்தில் மக்களோடு மக்களாக ஐக்கியமாகாமல் இருந்ததும்; தன்னிடம் கோரிக்கையோடு வந்தவர்களையெல்லாம், “அவரிடம் போ” என்று கே.என்.நேருவிடம் தள்ளிவிட்டதும்தான் அவருக்கான தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை பெற முடியாமல் போனதற்கான காரணங்களாக பட்டியலிடுகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.