சீமான் வழியில் திருமாவளவன் ! 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், “சாதியைக் காரணம் காட்டி எனக்கு பெண் தர மறுத்தவர்கள் 14 பேரை சுட்டுக் கொன்றேன்” என  தன்னிடம் சொன்னதாக திருமாவளவன் பேசி இருக்கிறார்.

இதே திருமாவளவன், “இயக்கத்தில் திருமணம் செய்யக்கூடாது என்ற விதி இருந்தபோது அதை மீற நினைத்த 14 பேரை சுட்டுக்கொன்றதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்” என சில பல வருடங்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தான் பேசிய பழைய கதையை இப்போது புரட்டிப் போட்டு இருக்கிறார். எது பொய்?

ஆரம்ப காலத்தில், மேடைகளில் திருமாவளவன் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பேசி கண்டனத்துக்கு ஆளானது உண்டு. பிறகு அவருடைய உரை வீச்சி மிக மேம்பட்டதாக அமைந்தது. ஆழமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும் தொடர்ந்தது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த நிலையில்தான், “பிரபாகரன் – திருமணம் – சாதி – கொலை” என புதுக்கதை விட்டிருக்கிறார். சீமானின் போலி தமிழ்தேசியத்தை தோலுரிக்கும் வகையில், வரும் மே 17 ம் தேதி, தமிழ்த்தேசிய மாநாடு நடத்த இருக்கிறார். மகிழ்ச்சி.

அதே நேரம்,  இவரது ” 14 கொலை”  பேச்சுக்கு ஈழ மக்களும், முன்னாள் போராளிகளும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சீமானோடு, திருமாவளவனை ஒப்பிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் உண்மையான அக்கறையோடு ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்களை நடத்தியவர்  திருமாவளவன். அவரது கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மீது கூட புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக ஒரு வழக்கு இருந்தது.

வருத்தத்தோடு சொல்கிறேன் …சீமானை எதிர்கொள்ள, அதே போன்ற பொய்கள் உதவாது என்பதை திருமாவளவன் உணர வேண்டும்.

– டி.வி.சோமு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.