திருச்சி கொள்ளை சம்பவம்.. பொறி வைத்து தூக்கிய குற்றப்பிரிவு போலீசார்..

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி கொள்ளை சம்பவம்.. பொறி வைத்து தூக்கிய குற்றப்பிரிவு போலீசார்..

திருச்சியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பொறிவைத்து திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

திருச்சி தாரநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது அப்பள கம்பெனியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி 4 லட்சம் பணம் 8 பவுன் தங்க நகைகள் விலை உயர்ந்த சாம்சங் மொபைல் கொள்ளை போனது, இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் இவ்வழக்கை விசாரிக்க மாநகர காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் உத்தரவின்படி கோட்டை காவல் உதவி ஆணையர் ரவி அபிராம் தலைமையிலான காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி தலைமையில் கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று 22/1/2021 கொள்ளையில் ஈடுபட்ட நபரான பாலசுப்பிரமணி என்ற கொள்ளையன் மர்மமான பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை திருச்சி காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

-ஜெ.கே

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.