புள்ளிங்கோகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சப் இன்ஸ்பெக்டர்- பொதுமக்கள் பாராட்டு..

0

புள்ளிங்கோகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சப் இன்ஸ்பெக்டர்- பொதுமக்கள் பாராட்டு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலமருத்துவக்குடி பகுதியில் கடந்த பொங்கல் தினத்தன்று கிராமப் பகுதியில் நடக்கும் பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரச்சினைக்குரிய நபர்கள் சுமார் 20 வயதுக்கும் உட்பட்ட நபர்களாக இருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் அவர்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனை வழங்கி மேலும் அந்த இளைஞர்கள் தலை மயிர்களை புள்ளிங்கோ ஸ்டைலில் வெட்டி இருந்ததை கண்டு அவர்கள் அனைவரையும் முடியை சீராக வெட்டி விட்டு என்னிடம் வந்து காட்ட வேண்டும் என்று வார்னிங் கொடுத்து அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் அந்த 10 பேர் கொண்ட இளைஞர் குரூப் முடியை சீர்படுத்தி கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமாரிடம் காண்பித்து விட்டு சென்றுள்ளனர்.

கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒழுங்கு படுத்தி அவர்களை சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் செய்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.கே

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.