பள்ளி சிறுமிகளிடம் சிலுமிசம் தலைமை ஆசிரியர் உட்பட 49 ஆண்டு சிறை தண்டனை டெல்டாவில் பகீர்… 

0

பள்ளி சிறுமிகளிடம் சிலுமிசம் தலைமை ஆசிரியர் உட்பட 49 ஆண்டு சிறை தண்டனை டெல்டாவில் பகீர்… 

பள்ளி பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த ஆசிரியரையும் அதனை தட்டிக் கேட்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 10 வயது சிறுமி ஒருவரிடம் அப்பள்ளியில் ஆசிரியர் அன்பழகன்(52) தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் மேலும் அவர் பல சிறுமிகளிடம் இது போன்ற பாலியல் தொடர்பான சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இதுதொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகர்(50) எந்தவித நடவடிக்கையும் அந்த ஆசிரியர் மீது எடுக்கவில்லை என்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததின் அடிப்படையில் விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கு மாண்பமை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்மூலம் அன்பழகன் போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன், தட்டிக் கேட்க வேண்டிய தலைமையாசிரியர் அதனை அலட்சியப்படுத்தியமைக்கா 49 வருடங்கள் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.