திருவெறும்பூர் அருகே  விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் 

0

திருவெறும்பூர் அருகே  விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் 

திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர் பட்டியில் மழையால் பாதித்த சம்பா ஒரு போக நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததோடு தண்ணீரில் தொடர்ந்து கிடந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையாக வந்து விசாரித்து நிவாரணம் பெற்றுத் தருவதற்கு உரிய கணக்கை எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி விவசாயிகள் நெப்போலியன் தலைமையில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அறுவடை செய்ய உள்ள நிலை நெற்பயிர்களில் நெல் பழம் நோய் தாக்குதல் பெரிய அளவில் உள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் நெல்லின் விலை குறையும் அபாயம் உள்ளதால் நெல் பழம் நோய் பாதித்த பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியை பாலகிருஷ்ணன் சரவணன் பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.