அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாமியாரை அடித்து நகைபறித்து தலைமறைவர் கைது !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

 

திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி, நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

திருவெறும்பூர் ஏப் 10 திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் கலைச்செல்வி வயது (53) இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்தபோது இறந்துவிட்டார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மகள் சலோமி என்பவரை நடராஜபுரம் ஊராட்சி யில் வசிக்கும் அருளானந்தம் மகன் சகாய சுரேஷ்(40) பெல் நிறுவன ஊழியர் இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பின்னர் அதிக வரதட்சணை கேட்டு கணவர் சகாய சுரேஷ் தொந்தரவு செய்ததால் 2019 ஆம் ஆண்டு சலோமி கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மகளுக்கு சீர்வரிசையாக போட்ட நகைகள், நிலம் பணம் ஆகியவற்றை தொடர்ந்து கலைச்செல்வி கேட்டு வந்தார் ஆனால் மருமகன் சகாய சுரேஷ் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு கலைச்செல்வியை அடித்து மிரட்டி வந்தனர் இதுகுறித்து கடந்த வருடம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்து மேற்படி சகாய சுரேசை போலீஸார் ஒரு வருடமாக தேடி வந்தனர் தொடர்ந்து போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கவே கலைச்செல்வி இதுகுறித்து திருச்சி மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தார் ஐஜியின் அதிரடி உத்தரவின்படி சகாய சுரேஷ் திருவெறும்பூர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.