அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி பேராசிரியர் சுபாஷ் சந்திர போஸ் அமெரிக்காவில் மறைவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி பேராசிரியர் சுபாஷ் சந்திர போஸ் அமெரிக்காவில் மறைவு !  பேராசிரியர் சுபாஷ் சந்திர போஸ், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் தமிழ் துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் இருந்தவர்.

அமெரிக்காவில் தன்னுடைய மகள் இல்லத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறக்க முடியாத மனிதர். மனம் கனத்து கிடைக்கிறது…. புதிதாக அரசுக் கல்லூரிகளுக்கு  அரசின் சார்பில் பயிற்சி அளிக்கும் பொறுப்பினை( திருச்சி மண்டலம்) ஏற்றவர் டாக்டர் சுபாஷ் சந்திர போஸ். அப்போது என்னையும் பயிற்சி அளிக்க விரும்பி  அழைத்து புனைக்கதை இலக்கியம் குறித்து பயிற்சி அளிக்க செய்தார் .

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அது மட்டுமல்ல பிஷப்  கீப்பர் கல்லூரியிலன் பாடத்திட்ட குழு உறுப்பினராகவும், பிற குழுக்களில் என்னை நியமித்ததோடு மட்டுமல்லாது பல்வேறு நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து அழைப்பார்.

திருச்சி பேராசிரியர் சுபாஷ் சந்திர போஸ்
திருச்சி பேராசிரியர் சுபாஷ் சந்திர போஸ்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

எழுத்தாளர் சா. கந்தசாமியின் நெருங்கிய நண்பர். சென்னையில் அவர் இல்லத்துக்கு பக்கத்திலே இவருடைய வீடு. நிவேதிதா பதிப்பகம் தொடங்கி பல்வேறு நூல்களை பதிப்பித்தவர்.

இவருடைய துணைவியார் தாவரவியல் பேராசிரியர் இவருடைய இரு மகள்களும் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் இருந்தே நான் அறிவேன். மகள்கள். இருவரும் திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர் .அவ்வப்போது விடுமுறைக்கு சென்று திரும்புவார். அமெரிக்க பல்கலைக்கழகங்கள், அங்குள்ள கல்வி முறைகள் குறித்து, நேரில் கண்டறிந்து  தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒவ்வொரு முறையும் சென்று திரும்பி அந்த அனுபவங்களை ஆர்வமோடு பேசுவார். இந்த முறை நீண்ட நாட்களாக அங்கேயே தங்கி விட்டார்.

திரும்பி வரவே மாட்டார் என்று நினைக்கவில்லை.

Bharathi Balan

புதுவை சீனு. தமிழ்மணி

May be an illustration of 1 person and text that says “இந்நலாசிரியர் இ முனைவர் சுபாசு அவர்கள் கற்றல், கேட்டல் நிறைந்த இயல்பினர். முனைப்போடு செயல் படத்தக்க திறலினர். நுண்பொருள் அவாவும் ஆற்றலும், உலகத்தோடு ஒழுகும் அறிவும் ஒருங்கே செறிந்த பண்பினர். பழமைத் திட்பமும், நுட்பமும் போற்றிப் புரக்கும் பெற்றியர். மனங்கொள்ளும் ஆசிரியர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ‘கட்டுரை இலக்கியம்’ பற்றித் தமிழில் முனைவர் முதல் ஆராய்ச்சியாளர். ‘பாரதிதாசனும் தமிழியமும் எது புதுக் கவிதை’, ‘விடியல்’ ஆகிய நூல்க காறும் இவரிடம் கருக்கொண்டு வெளிவந்து இவற்றுள் ‘விடியல்’ என்பது இவர் தொகுப்பு. ‘பதிவும் பார்வையும்’ எனப் பெயரிய இந்நூல், தன்னகத்தே பன்னிரு கட்டுரைகளைப் சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார், ஜெயகாந்தன் முதலியோரின் முனைவர்னவர் சுபாசு தம் ஆய்வுப் பார்வையுட படைத்துள்ளார். கட்டுரைக எழுதப்பெற்றவை. தமிழிலக்கியட் தொட்டு இன்று கிடக்கும் பான்மையும் பல்லோரும் பல்லோரும்பயன்பெ! பயன்பெ”

Govindaswamy Rajagopal

ஆழ்ந்த வருத்தம். பல்லாண்டுகள் பழக்கம். ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்காவிலிருந்து பெரிதாகக் குறுஞ்செய்திகள்வழி உரையாடினார்; உடல்நிலை குறித்தும் பேசினார். சடுதியில் இயற்கை எய்துவார் எனக் கிஞ்சித்தும் எண்ணவில்லை

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.