TTF என்னும் மாயவலை ! இளசுகளின் மோகம் ! !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

டிடிஎஃப் வாசன் என்னும் மாயவலை !

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞன். 2k கிட்ஸ் என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினரால் கொண்டாடப்படுபவர். ”தல”, “தளபதி” யையெல்லாம் ரேஸில் முந்திக்கொண்டு,  டாப் கியரில்  2k கிட்ஸ் ஆதர்ஷ நாயகன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார், வாசன்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

சமீபத்தில் கோவையில் தனது பிறந்தநாளை யொட்டி ரசிகர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், வாசன். நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டத்தை காட்டிலும் ஒரு மடங்கு கூட்டம் கூடுதலாகத்தான் கூடியிருந்தது வாசனுக்கு. போலீசு புகுந்து கூட்டத்தை கலைக்க வேண்டிய சூழல் வேறு!

செம்ம சூப்பரான திரைப்படம்..

வீடியோ லிங்:

அட யாருப்பா? அந்த வாசன் என்கிறீர்களா? பப்ளிக்கா கேட்டு, 2k கிட்ஸ் கிட்ட பல்பு வாங்கிடாதீங்க. வாசன் அவரு பேரு. அவரு ஒரு யூட்யூப் சேனல் நடத்துறாரு. அந்த சேனலுக்குப் பேரு டிவின் திராட்டிலர்ஸ்’ (Twin Throttlers). அந்த சேனலை கிட்டத்தட்ட 28 இலட்சத்துக்கும் மேல (உங்க பாஷையில் வேலைவெட்டி இல்லாத வெட்டி பசங்க) பின் தொடர்றாங்க. அவரையும் அவரோட ரசிகர்களையும் சேர்த்து, செல்லமாக ‘டிவின் திராட்டிலர் ஃபேமிலி’ (Twin Throttlers Family) னு வச்சிருக்காரு. இந்த ஹிஸ்டரி, ஜியாகிரபி காரணமாகத்தான் கோவையின் சாதாரண வாசன் “டி.டி.எஃப். வாசன்” ஆனாரு.

அது சரி. அப்படி என்ன அவரோடு சேனல்ல போடுறாரு? எதுக்கு இம்பூட்டு கூட்டம் அவரு பின்னாடினுதானே கேட்கிறீங்க. அவர் ஒரு சாகசக் கலைஞர். பைக் வீல மேல தூக்கி காட்டுவாரு. மின்னல்கூட போட்டி போடுற மாதிரி வேகமா போவாரு. கேர்ல் பிரண்ட் பைக் பின்னாடி ஒக்கார வச்சி ஓட்டி காட்டுவாரு. சைடு ஸ்டாண்டுல தீ பறக்கும். இந்தியா பூராவும் காஸ்ட்லி பைக்லயே சுத்துவாரு. ஆக மொத்தம் இந்திய வரைபடத்துக்கே பைக்ல கோடு போடுவாரு. அப்புறம், இதையெல்லாம் வீடியோவா போடுவாரு.

அவரு வச்சியிருக்க பைக்கோட விலையே எட்டு லட்சம், பத்து லட்சம். ஒரு காலத்துல சொந்தமா பைக் வாங்கக்கூட  காசில்லாம, குருவி மாதிரி கஷ்டப்பட்டு சேர்த்து மொத பைக் வாங்குனேன்னு அழுகாச்சி வீடியோ போட்டா அத பார்க்க ஒரு கூட்டம். கடைசியா 15 லட்சத்துக்கு வாங்குன பைக்க வாய பொளந்து பார்க்க ஷோரூம்ல அவ்ளோ கூட்டம். அம்பூட்டும் இளவட்ட பசங்க. வாசன் எத வீடியோவா போட்டாலும், அத பார்க்க லட்சக்கணக்குல ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்கதான் 2k கிட்ஸ்.

“எங்க வூட்டான்ட, தெருவான்ட, ஹெவி டிராஃபிக்லயும் மசுரே போச்சுன்னு இதுமாரி பன்றவிங்கள காலிப்பசங்கனுல நாங்க சொல்லு வோம்”னு நீங்க மைன்ட் வாய்ஸ்ல யோசிக்கிறது, இங்க கேட்குது. பார்த்து சூதானமா, இருங்க, 2k கிட்ஸ் கிட்ட வாங்கிக் கட்டிக்காதீங்க.

அட, சிம்பாலிக்கா சொல்ல னும்னா, ஜி.பி.முத்து எப்படியோ, அப்பிடித்தான் இந்த டி.டி.எஃப். வாசன். அவருக்கு பைக் ஓட்டத் தெரியாது. இவருக்கு பைக் ஓட்டத்தெரியும். இதுவும் வயதும்தான் வித்தியாசம். மத்தபடி, ரெண்டு பீசும் ஏறத்தாழ ஒரே ரகம்தான்.  இவருக்கு இன்னொரு முகமும் இருக்கு. இவர் ஒரு சமூக ஊடக பிரபலம் (Social Media Influencer) .  நடிகர், நடிகைகளை செலிபிரட்டினு சொல்ற மாதிரி, இவரு இன்பிலுயன்சர்.  இவரு வாயால ஒரு விசயத்தை சொன்னா அது ஒரே நேரத்துல லட்சக்கணக்கான பேரோட கவனத்துக்கு போகுதுல்ல. இத வச்சி தனியா வருமானம் பார்க்க லாம்ல. இன்ஸ்டாகிராமில் 205 மில்லியன் பின்தொடர்வோரை வச்சிருக்கிற விராட்கோலியே ஒரு பொருளை தூக்கி காட்றதுக்கு 5 கோடி வரைக்கும் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

4

அதெல்லாம் சரி. அதனால  2k கிட்ஸ்-க்கு என்ன பிரயோசனம்; நமக்கு என்ன வந்துச்சுன்னு கேட்கு றீங்களா? உங்க ஆதங்கம் புரியுது. ஆனா, இன்னிக்கு ட்ரண்ட் இதுதான்.

தானுண்டு தன் சோலி உண்டுனு எதுலயும் சேரமா ஒதுங்கிபோற சமத்து 2k கிட்ஸ் ஒருரகம். இதுல சேராத தனிரகம்தான் டி.டி.எஃப்.வாசன் டார்கெட். ”இலக்கற்ற பயணம். அரசியலற்ற வாழ்க்கை. வாழும் ஒவ்வொரு நொடியையும் ரசிச்சு, அனுபவிச்சு வாழனும்.” அதான் இவங்க டெபினசன். விதியாவது மசுராவது. “Break the rules” இதுவே இவர்களை ஆட்டுவிக்கும் மந்திரம்.

கை எலும்பு நோக தேய்ச்சி வச்ச கண்ண எடுக்காம  பல மணி நேரமா, ‘கொலை வெறியோடு’ ப்ரீபையர் விளையாடும் பசங்க தான் காவாலி பய மாதிரி மண்டை வெட்டு. பாதி கிழிஞ்சி, மீதி நஞ்சி போன மாதிரி பேண்ட். இடுப்புல நிக்காத நிக்கரும், உள்ள போட்டுருக்க ஜட்டி கம்பெனி பளிச்சுனு தெரியிற மாதிரி திரியிற பசங்கதான் வாசனோட பேமிலி. இந்த பசங்களோட ஹீரோதான் இந்த டி.டி.எஃப்.வாசன், வகையறாக்கள். வாழ்க்கைத்தரம் நிபந்தனையல்ல. வயதும் ஒத்த சிந்தனையும்தான் நிபந்தனை. பணக்கார வூட்டுப் பசங்களும் அப்படித்தான் சிந்திக்குது. பிளாட்பாரத்துல கெடக்கிற பசங்களும் அப்படித்தான் சிந்திக்குது.

அவன் வீடியோவுல காட்டுற வாழ்க்கைக்கு ஏங்குது. கேர்ள் பிரண்டோடு, காஸ்ட்லி பைக்ல ஒருவாட்டியாச்சும் போகனும்னு துடிக்கிது. அடுத்த வேளை சோத்துக்கு இல்லாட்டியும், ஆயி அப்பன சித்தரவதை பண்ணி, ரெண்டு லட்ச ரூபா பைக்க வாங்கி கொடுனு அட்டகாசம் பன்னுது.  பைக் வாங்கித் தரலனு தூக்குமாட்டி செத்த பசங்களும் இருக்காங்க. இதுக்கு பயந்துகிட்டே, ஒத்த புள்ளய வச்சிருக்கோம்னு கடனகட்டி பைக் வாங்கி கொடுக்குற பெற்றோரையும் நாம பார்த்திருக்கோம்.

வீடியோ லிங்:

பசங்களுக்கு டஃப் கொடுக்குறா மாதிரி இப்போ பொண்ணுங்களும் காஸ்ட்லி பைக் கோட சுத்துறத பார்த்திருப்போம். பையன் மேல மோகம் கொள்வதைவிட, காஸ்ட்லி பைக் மேலயும் மோகம் கொள்ளும் அளவுக்கு பெண் களின் ரசனையை மாத்துனதுலயும் வாசன் வகையறாவின் பங்கு இருக்கு. மார்க்கெட்ல புதுசா எறங்குற காஸ்ட்லி பைக் கம்பெனிகாரனே, டி.டி.எஃப். வாசன் படத்த காட்டித்தான் பைக்க விக்கிறான்னா… பார்த்துக்கோங்க.

”உன்ன வச்சி அவன் நல்லா சம்பாதிக் கிறான்டா. அவன் பின்னாடி நீங்க ஏன்டா போறீங்கன்னு” தப்பித்தவறி திட்டி தொலைச்சிறாதீங்க. நியூசென்ஸா பைக்க ஓட்டுனது, அது இதுன்னு டி.டி.எஃப். வாசன் மேல அவ்ளோ வயலேசன் கேஸ் இருக்கு. ”எவன்டா அது எங்காளு மேல கேசு போட்டதுனு” பத்து வயசு பொண்ணு போலீச திட்டுதுன்னா, அதுதாங்க டி.டி.எஃப். வாசன் பேமிலி.  வீட்ல நாம சொல்றத ஒரு நிமிசம் நின்னு கேட்க பொறுமையில்லாம ஓடுற பயபுள்ளதான், டி.டி.எஃப்.வாசன் லைவ்ல நம்ம பேரை உச்சரிப்பானானு கண்ணு பூக்க காத்துகிடக்கு. ரசிகனின் பேரையும் மூஞ்சையும் உடம்பெல்லாம் பச்சகுத்தி பாசத்த பொழியிறாரு டி.டி.எஃப் வாசன்.  ”உன்ன வச்சி அவன் கோடியில புரளுறான். நீ தெருக்கோடியில நின்னு வாய பொளந்து பார்த்துட்டு இருக்கனு” சொன்னாலும் மண்டையில ஏறாத, இந்த 2k கிட்ஸ் தான் டி.டி.எஃப். வாசனோட டார்கெட். டி.டி.எஃப். வாசன்தான் 2k கிட்ஸோட பேவரைட். டீ கிளாஸ்ல விழுந்த பொற மாதிரி. ஒரு விதத்துல இதுவும் ஒரு வகை போதைன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்றீ

– வே.தினகரன்

வீடியோ லிங்:

 

5
Leave A Reply

Your email address will not be published.