துணைமுதல்வரா ? அமைச்சரா ? பற்ற வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! வீடியோ !
உதயநிதி துணைமுதல்வரா ?
அமைச்சரா ? பற்ற வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!
44ஆவது பிறந்தநாளை நவம்பர் 27 கொண்டாடிய உதயநிதிக்காக தமிழகம் முழுவதும் விழாக்கள் சில நாட்களுக்கு முன்பே திமுகவில் களைகட்டி கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாருதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் என்று பல வகையில் கட்சியினர் உதயநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடி தீர்த்தனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குடும்பமும் மூன்றாவது தலைமுறையாக நட்பில் உள்ள குடும்பங்கள் ஆகும். 2016 ஆம் ஆண்டு எம்எல்ஏவாக திருவரம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் உள்ளார். 2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். முதலில் பள்ளிக்கு ஒன்றாக சென்ற இருவரும் தற்போது சட்ட மன்றத்திற்கும் ஒன்றாக சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “உதயநிதி ஸ்டாலினுடைய திறமையை ஒரே தொகுதிக்குள் சுருக்காதீர்கள், அமைச்சராக பொறுப்பு வழங்கி தமிழ்நாடு முழுக்க விரிவு படுத்துங்கள்” என்று கூறியிருந்தார். இப்படி உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று பொது வெளியில் கிளம்பிய முதல் குரல் மகேஷ் பொய்யாமொழியின் குரல்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இந்த குரல் எதார்த்தமானதா ? அல்லது திட்டமிட்டு சொல்லப்பட்டதா என்று கட்சியில் மூத்த அரசியல்வாதிகள் முதல் இளைய தலைமுறை விவாத பொருளாக மாறி வருகிறது.
தமிழக முதல்வர்வரின் மகன், மருமகன், ஆகியோர் பவர் சென்டராக இருந்து வந்த நிலையில் கோட்டையில் உள்ள உதயமான அதிகாரி தான் தற்போதைய பவர் சென்டராக மாறிவருகிறார். அவர் சொன்ன சொல்லை முதல்வரும் தாண்டுவது இல்லையாம். முதல்வரின் மகனுக்கும் அவர் ஆலோசகராக மாறிவிட்டாராம்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய படப்பிடிப்பிற்காக அண்டை மாநிலத்திற்கு சென்ற போது கூட படப்பிடிப்பு இடையே கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு , முதல்வரின் முகவரி, ஆகிய துறைகளுக்கு வந்த மனுக்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அந்த அதிகாரியுடன் நீண்ட தனி ஆலோசனை நடத்தினார்களாம். இதற்கான முழு ஏற்பாட்டடையும் கோட்டை உள்ள அந்த உதயமான அதிகாரிதான் செய்து கொடுத்தாராம்.
தமிழக கோட்டை வட்டாரத்தில் உதயமான அதிகாரியின் இந்த தலையீடு, தமிழக முதல்வரின் நிழல் என்று வர்ணிக்கப்படும் மாப்பிள்ளை சாரின் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியின் சில செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பதால் பெரிய மன வருத்தத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாம். இந்த மன வருத்தம் குடும்பத்திற்குள்ளும் பரவ ஆரம்பித்த நிலையில் தான்… மகனின் நண்பரான அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஜூன் மாதம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாம், அந்த நேரத்தில் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் பெயரை அமைச்சரவை பட்டியலில் சேர்த்தால் மூத்த அமைச்சர்களுக்கு வருத்தம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலேயே தற்போது முதலே உதயநிதி ஸ்டாலினை துணைமுதல்வர் ஆக்க வேண்டும் சித்தரஞ்சன் சாலையில் அமைந்திருக்கக் கூடிய முதல்வரின் வீட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
மாப்பிள்ளை சார்…. மனவருத்ததில் உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சரியான நேரத்தில் வெளிப்படுத்தி உள்ளாராம், எப்படியோ உதயநிதி விரைவில் அமைச்சராவது உறுதியாகி இருக்கிறது என்று உடன் பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர்.
+