அதிமுகவில் தேர்தல் தேதி அறிவிப்பு – ஒருங்கிணைப்பாளராகிறார் எடப்பாடி – விரக்தியில் பன்னீர்செல்வம்!

0

டிசம்பர் 1 நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். இவ்வாறு அதிமுகவின் தலைமைப் பதவியாக தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்று இருந்த நிலையை மாற்றி, அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று அதிமுக தலைமையகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யும் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு அதிமுகவின் திட்ட விதி 30 பிரிவு 2-ன் படி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில் வழியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்யும் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையராக பொண்ணையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தேர்தலுக்கான வேட்புமனு 3 .12‌. 2021 முதல் 4.12. 2021 வரை நடைபெறுவதாகவும், வேட்புமனு பரிசீலனை 5ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுதல் 6ஆம் தேதி அன்று இருக்கும் என்றும், பிறகு 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 .12. 2021 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

4 bismi svs


இந்த தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தவிர மற்ற யாரும் விருப்ப மனுக்களை பதிவு செய்ய மாட்டார்கள் என்று அதிமுக மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல் கசிகின்றது.
ஆனால் இந்த முறை எடப்பாடி கே பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதேநேரம் ஓ பன்னீர்செல்வமும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் என்பதால் அதிமுகவில் மறைமுகமாக நடந்த சலசலப்பு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து அதிமுகவின் மேலிட நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி கே பழனிசாமி கைப்பற்றி விடுவர். அதேநேரம் இணை ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் செயல்படுவார் என்று கூறினர்.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.