அரசியலில் தனது பலத்தை காட்ட சசிகலா அதிரடி முடிவு!

0

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் தற்போது வரை அரசியலில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை, அதிமுக தலைமைக்கு சில அழுத்தங்கள் இருந்தாலும் சசிகலாலவால் பெரிய வகையில் மாற்றத்தை நிகழ்த்த முடியவில்லை என்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே சசிகலாவிடம் இதுக்குறித்த தகவலை தெரிவித்து உள்ளனர்.

இதனால் பொறுமையாக அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்த சசிகலா தற்போது டிசம்பர் 5 ஜெயலலிதாவின் நினைவு நாளன்று பிரமாண்ட கூட்டத்தை திரட்டி தமிழக அரசியலில் பரபரப்பை நிகழ்த்த தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். டிசம்பர் 5 சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் நேரத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் பெருமளவில் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டிருக்கிறார்.

அதேநேரம் டிடிவி தினகரன் தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செய்ய உள்ளாராம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.