மயானத்தை ஆக்கிரமித்த திருச்சி வாசன் ரியல் எஸ்டேட்- தட்டிக் கேட்டவர் கொலை வீடியோ !

0

மயானத்தை ஆக்கிரமித்த திருச்சி வாசன் ரியல் எஸ்டேட்- தட்டிக் கேட்டவர் கொலை.

திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து பஞ்சாயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்கள் ஆக்கிரமித்து விட்டதாக புகார் எழும்பியது.

https://businesstrichy.com/the-royal-mahal/

கொலை செய்யப்பட்ட சிவகுமார்

அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் தாசில்தார், விஏஓ அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டதில், சம்பந்தப்பட்ட இடம் மல்லியம்பத்து ஊராட்சிக்கு உட்பட்டது என தெரியவந்தது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகளே அளந்து அளவு கற்கள் நடப்பட்டது.

ஆனால் கற்கள் நடப்பட்ட அன்று இரவு மர்ம நபர்கள் சிலர் கற்களைத் பிடுங்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா

இதுகுறித்து மல்லியம்பத்து தலைவர் விக்னேஸ்வரன், ரமேஷ், ஆகியோர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் கிராம மக்கள் சார்பாக புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் எங்கள் கிராமத்தில் மிக அருகில் 100 மீட்டர் தூரம் உள்ள இடத்தில் எங்கள் மூதாதையர்கள் கிராம பொது பயன்பாட்டுக்காக சர்வே எண் 49 -ல் ஒரு பகுதியில் ஒழுங்கற்ற நான்கு எல்லைகளை கொண்ட சுமார் 5 சென்ட் பரப்பளவு உள்ள எங்கள் கிராம கணக்கில் எங்கள் கிராம பெயரிலேயே மயானம் ஒன்று அமைத்திட நிலம் ஒதுக்கப்பட்டது.

அது தற்போது தகுந்த பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் பொதுமக்கள் காலப்போக்கில் குப்பை குறியாக பயன்படுத்தி அதனால் கிராமத்திற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கொலையாளி தீபக்

இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல், நாகராஜன் , மணப்பாறை BDO ரமேஷ் குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர் சோலையை சேர்ந்த சில முக்கிய நபர்கள், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையாவிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு, நிலத்தை தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் எங்களை கைது செய்தால் கிராம பிரச்சினையை உருவாக்கி விடுவோம் என்று காவல் அதிகாரிகளையே மிரட்டியதால் அவர்களும் இதனை கண்டும் காணாதவாறு விட்டுள்ளனர்.

 

கொலையாளி பிரபாகரன்

இந்நிலையில் நேற்று 29/11/2021 செங்கதிர் சோலையை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆதரவாளர் சிவா என்கின்ற சிவகுமார் வீட்டில் இருந்தபோது உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

DMK_Kathrivel
DMK_Kathrivel

இதுதொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செங்கதிர் சோலையை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆதரவாளர் பிரபாகரன், தீபக் ஆகியோர் கதிர்வேல் மற்றும் வாசன் எஸ்டேட் நிறுவனர் ரவி முருகையா தூண்டுதலின்பேரில் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

மேற்கண்ட 4 பேர் மீதும், வழக்கு பதிவு செய்த நிலையில் பிரபாகரன் தீபக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமறைவாக உள்ளதாகவும், வாசன் ரியல் எஸ்டேட் ரவி முருகையா கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தர்ஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.